90. சோனைவார் குழலி னார்தஞ் சூழலி னாப்ப ணின்றாள் தானையம் பூக்கள் சூழ்ந்த தாமரைப் பூவைப் போலும் மீனினஞ் சூழ நின்ற வெண்கதிர் மதியம் போலும் கானக மயிலாற் சூழ்ந்த மானையும் போல நின்றாள். 91. துடியிடை யொருத்தி கைகாற் றுவண்டுமேல் வரமாட் டாது வடிவுடைக் கையை நீட்ட மலைக்கையாற் கரைசேர்க் கின்றான் மடுவிடை வீழ்ந்து நீந்தி வரமுடி யாமற் சோரும் பிடியினைக் கரையிற் சேர்க்கும் பெருங்களி றொத்தா னம்மா. 92. திரையுடை யுடுத்து முத்தச் சிறுநகை புரிந்து செந்தா மரைமுக மலர்ந்து நீல மலர்விழி விழித்துத் துற்றும் சுரையளி வாய்ப்பண் பாடிச் சுரிகுழ னாரம் பின்னி வரையகற் சுனையக் குன்ற மகளெனத் தோன்றல் காண்பார். 93. ஈங்கிவ ராக வேநம் மிறைவனு முயர்வான் றோய ஓங்கிய குறிஞ்சிக் குன்றத் துள்ளபல் வளங்கள் முற்றும் பாங்கொடு தமிழின் றொன்மை பழுத்தநா வலர்கள் நேரில் ஊங்கியே புனைந்து காட்ட வுவந்துகண் டிருந்தா னம்மா. 94. ஈண்டிய புகழின் பால ரிவ்வகை விளையாட் டார்ந்து காண்டகு மலையின் காட்சி காணலோ டமைகி லாது வேண்டிய கருவி கட்கும் விறகிக்கும் மனைவாழ்க் கைக்கும் ஆண்டுள மரங்க ளோடவ் வணிமலைப் பொருளுஞ் சேர்ப்பர். | 3. காட்சிப் படலம் | கலித்துறை | 1. தானி னைத்ததை முடிக்குநந் தமிழிரா வணனும் தேனி னித்தசெந் தமிழருந் திகழ்தரக் கூடி நானி லத்தினு முலவிய நடைமுறை நவின்றாம் வானி னித்தவண் டார்குழல் வரன்முறை வகுப்பாம். ------------------------------------------------------------------------------------------- 90. சோனை - கார்முகில். வார் - நீண்ட. சூழல் - கூட்டம். தானை - தொகுதி. 91. துடி - உடுக்கை. 92. திரை - அலை. நகை - பல். துற்றும் - உண்ணும். சுரை - தேன். நாரம் - பாசி. 93. ஊங்கியே - ஊக்கத்தோடு. | |
|
|