15. புள்ளுக்குல மெல்லாமவள் பூவைக்குழல் கூடும் எள்ளுக்குல மெல்லாமவள் இமைகட்கிடை நாடும் வள்ளைக்குல மெல்லாமவள் அள்ளுக்குற வாடும் கி்ள்ளைக்குல மெல்லாமவள் கிளவிக்குல மாகும். 16. அன்புக்கொரு தாய்மிஞ்சிய வருளுக்கொரு தந்தை தென்புக்கொரு தனையுள்ளிய தெளிவுக்கொரு சுற்றம் இன்புக்கொரு குழவித்தொகை யினிமைக்கொரு நன்னூல் என்புக்கொரு வுயிராமிவை யெல்லாமவ ளானாள். 17. அயலுக்கய லோடித்தன தன்னைக்கொரு முத்தம் இயலுற்றரு கோடித்தன தெந்தைக்கொரு முத்தம் செயலிப்படி யாகத்துணை திகழிற்படு பெண்மைப் பயனைப்பெறு மங்கைத்திரு பருவத்தினை யுற்றாள். | ஷ வேறு வண்ணம் | 18. பொன்னை வேங்கையின் பூவை யிளந்தளிர் தன்னை வானிற் றகதக வென்றொளிர் மின்னை யொத்தொளிர் மேனியைத் தாங்கியே தன்னை யொத்துத் தயங்கி யியங்கினாள். 19. விண்ணை யுண்டு விளங்கொளி மேவுண்டு தண்ணை யுண்டு தளிரொடு பூவுண்டு பண்ணை யுண்டுறை பாட்டளி காவுண்டு கண்ணை யுண்டு கமழ்திரு மேனியாள். 20. நீரை வைத்து நிவந்து துவள்கருங் காரை வைத்துக் கருமணல் வைத்திருள் சேர வைத்திருஞ் சைவலஞ் சேர்த்தளி ஊர வைத்த வொளிர்கருங் கூந்தலாள். ------------------------------------------------------------------------------------------- 15. புள் - வண்டு. பூவை குழல் - பூவைத்த கூந்தல். இமைகட்கு இடை - மூக்கு. வள்ளை - ஒருகொடி. அள் - காது. கிள்ளை - கிளி. கிளவி - சொல்; சொல் கற்கும். 16. தென்பு - வலி. தனை - தன்ஐ அண்ணன். உள்ளிய - எண்ணிய. என்பு - உடல். 18. தயங்கி - விளங்க | |
|
|