பக்கம் எண் :


இராவண காவியம் 191

   
         35.    இன்ன தன்மைய ளான விறைவியும்
               தொன்ன லம்புணர் தோழியர் தம்மொடு
               மன்னி யேவிளை யாடி மகிழ்வுறீஇ
               நன்ன லம்புணர் நாள்கழித் தாளரோ.
 
அறுசீர் விருத்தம்
 
         36.    தன்னுயிர்போல் மன்னுயிரைத் தனிக்காக்கு
                    மாயோனுந் தமிழர் சூழ
               மின்னியலு மழைமுகிலும் விழைந்துகுடி
                    புகுந்திருந்து வெறுமை யின்றிப்
               பொன்னியலும் பொருள்பலவு மருளுடையார்
                    மனம்போலப் பொலியப் பெய்ய
               மன்னியலு மருவிபல நின்றிழியுங்
                    குன்றமுற வழிக்கொண் டானே.

         37.    தன்குலத்துக் கொருகொடியாய்த் தமிழ்க்கொடிபோற்
                    றகைவாய்ப்பத் தமிழர் போற்றும்
               பொன்கலத்துப் பொதிசுமந்து நுண்ணியசிற்
                    றிடைநுடங்கப் பொருவி லாளாய்
               மின்குலத்துத் திகழ்மதிபோற் றோழியர்சூழ்
                    தரத்தமிழ்க்கோர் விளக்க மாகி
               நன்கலத்த ளாகியவண் டார்குழலி
                    யொடுதாயும் நயப்பச் சென்றாள்.

         38.    முருகியலே டெழுத்தாணி மருவுதமிழ்க்
                    கொடிநுடங்க முரச மார்ப்ப
               வெருவிடப்புள் விலங்கினங்கள் பறைபலவுங்
                    கடலொலிப்ப வெண்சங் கூதத்
               திரடிரளா யிருபாலாஞ் செந்தமிழோர்
                    புடைசூழத் திகழ்கா னீங்கி
               வரையிருந்து நிலம்படரு மருவியஞ்சா
                    ரலைக்கடந்து மலைபுக் கானே.
-------------------------------------------------------------------------------------------
         38. முருகு - அழகு. திரள் திரளாய்.