43. சென்றவனுந் தமிழ்வாழுந் திராவிடரோ டொருங்குகுழீஇச் செறிகார் மேயும் குன்றமதன் பலவளமுங் கண்டுமகிழ்ந் துரியரொடு கூடி யாடி ஒன்றியசெந் தமிழரொடு மலைவிருந்துங் காவிருந்து முவப்பி னுண்டே என்றுமிலா வுளமகிழ்வோ டேழிசைச்செந் தமிழ்ப்பயன்றுய்த் திருந்தா னிப்பால். | வஞ்சி விருத்தம் | 44. இவ்வாறிவ ராகிட வேகிளியும் ஒவ்வாதிவ ளோதுவ வோதவெனச் செவ்வாய்திற வாது தியங்கிடவே அவ்வாய்திறந் தேசொலு மாய்மொழியாள். 45. ஒன்றாகிய தோழிய ரோடுசெலீஇக் கன்றோடு கரும்பிடி கைக்களிறு சென்றாடு செழுஞ்சுனை தேனொழுகுங் குன்றாடு நினைவு குறித்தனளே. 46. கொய்வார்சினை வேங்கை குலைகுலையாய்ப் பெய்வார்குழன் மீது பிறங்கிடவே கைவாரி மலர்ந்த கருங்குவளை மைவாரிய கண்மலர் வாய்பொதிவார். 47. விரைமேவிய சந்தன மெல்லிணரை வரையாடு மடுத்திட வாய்தருவார் விரலோடு பொருத்தியே மென்முகையைப் புரையாதொழி காந்தள் புறத்திடுவார். 48. மையாடு மலைக்குற மாதரொடு கையோடுகை யுண்டு கயற்றுணையை வையாகிய வேல்விழி வாயடுவார் துய்யாவென வாடுவர் தும்பிலியே. ------------------------------------------------------------------------------------------ 43. தமிழ்வாழுந் திராவிடர் - புலவர். இப்பால் - அதன்பிறகு. 44. தியங்கிட - வருந்த. அவ்வாய் - அழகிய வாய் 47. இணர் - பூங் கொத்து. காந்தள் முகையைப் புறத்திடுவார். | |
|
|