பக்கம் எண் :


இராவண காவியம் 199

   
        76.     கண்டான் மனமு மிருகண்ணுங்
                    கருத்து மொருங்கே பறிகொடுத்துத்
               தண்டா மரையின் செந்தேனைத்
                    தமிழ்வாய்ப் பெண்டே னதுவுண்ண
               வண்டார் தன்வெறு வாய்சப்பும்
                    மலிநீர் பழனத் திருநாடன்
               கண்டே யவள்கண் தன்கண்ணாக்
                    காணா நின்று களியுண்டான்.

        77.     உள்ளப் படையோ டயலாளுக்
                    குணர்வு மடிமைப் படவடிகள்
               தள்ளத் தரியாத் தடுமாறித்
                    தலைமை கொன்றே அயலார்க்குக்
               கள்ளப் படையோ டடிமையதாய்க்
                    கடமை தவறி முதல்கொன்ற
               எள்ளப் படுமவ் விரண்டகனை
                    இன்றே யொத்து நின்றானே.

        78.     யாரோ இவள்தான் எவ்வூரோ
                    அயலோ இக்குன் றினளோதான்
               பேரே தோயா ரோவிவளைப்
                    பெற்றோர் பருவ முற்றனளோ
               ஓரே னானே யதுவன்றி
                    ஒப்பொன் பானு முடையாளோ
               காரோ மானாக் கருங்குழலாள்
                    கருத்து மெதுவோ அறியேனே.
-------------------------------------------------------------------------------------------
        77. முதல் - அண்ணன். இன்றே - இப்போதே. முன்னும் பின்னும் இல்லை என்பதாம். 79. ஓரேன் - தெரியேன். ஒப்புமை பத்தையும் தொல்காப்பியப் பொருளதிகார மெய்ப்பாட்டியல் 25-ஆம் சூத்திரத்தில் காண்க. ஒப்புமை ஒன்பான் - உருவ மொழிந்த ஒன்பது. மானா - ஒப்பாகா. இது, ஐயம். களவியல் - 4. இப்பாட்டின் கருத்து - தொல், களவு. 4-ஆவது சூத்திரத்தின் குழந்தை உரையின்படி அமைந்தது.