திராவிட இன மக்களின் எழில் மிக்க வாழ்க்கையிலே, ஆரிய இனக் கலாச்சாரம் தூவப்பட்டது என்பதை மறுப்பார் எவருமிலை. நாம், நமது கருத்துக்கு மாறானவர்கள், இருசாராரும் இதனில் மாறுபட்டோ மில்லை. ஏனெனில், இது மறைக்க முடியாத உண்மையாகிவிட்டது. திராவிடம் - ஆரியம் எனும் இருவேறு பண்பாடுகள் இருந்தன, கலந்தன. இதனை அவர்களும் கூறுகின்றனர். எது திராவிடம், எது ஆரியம் என்று பிரித்துக்காட்டக் கூடாதவாறு கலந்துவிட்டது என்று புன்முறுவலுடன் கூறுவர். பிரித்துக் கூறக்கூடாது என்ற ஆர்வம் அவர்களுக்கு இருப்பது மட்டுமல்ல, அவர்தம் ஆராய்ச்சியாலும் தெரிவது, பிற்காலத்தில் பிரிக்கக்கூடாதவாறு, ‘சர்வ ஜாக்கிரதையாக’ மிகத் திறமையுடன், அந்நாளிலே ஆரியத்தைத் திராவிடத்தில் குழைத்திருக்கிறார்கள் என்ற உண்மையும் தெற்றென விளங்குகிறது. கண்டுபிடிக்கவே முடியாத கனவு! வெளிக்குத் தெரியாமல் நடைபெறும் விபசாரம்! ஓசைப்படாமல் கடிக்கும் நாகம்! - இவைபோல் இது பிரிக்கவே முடியாதபடி கலந்து போயிருக்கக் கூடும். இஃதோ புதைபொருள் தோண்டப்படும் காலம். மொகஞ்சதரோக்கள் காணப்படும் காலம்! மனித அறிவுக்கு எட்டாதது என்று எண்ணப்பட்ட எண்ணற்ற விஷயங்களை எளிதில் அறியக்கூடிய வழிவகை கண்ட காலம். எனவேதான், எது ஆரியம், எது திராவிடம் என்று பிரித்துக் காட்டக்கூட முடியாத அளவு கலந்து போய்விட்டது என்று கூறப்படும் தன்மையை, மாற்றிட முடிகிறது. மாற்றாரின் கோபத்துக்குக் காரணம் அதுவே. எவ்வளவு முன்னேற்பாடாக, திராவிடக் கலையினைச் சிதைத்தும் குறைத்தும், ஆரியத்தை அத்துடன் இணைத்தும் இழைத்தும், ஒட்டியும் கட்டியும், பூசியும் தூவியும் பலவகையாலும் பலகாலமாகப் பாடுபட்டுக் கலந்தும், இன்று இந்தப் ழுபாவிகள்ழு எப்படியோ துப்புக் கண்டுபிடித்து, துருவித் துருவிப் பார்த்தும் சலித்தும் புடைத்தும் புடம்போட்டும் பார்த்து, இதோ ஆரியம், இதோ திராவிடம், இன்னது இன்ன அளவு உள்ளது என்று பிரித்துக் காட்டுகின்றனரே! அந்த நாள் தொட்டு நாம் செய்த முயற்சிக்கு இந்நாள் வந்ததே விபத்து! என்றெண்ணிக் கவலைப்படுகின்றனர்; அவர்கள் கவலைப்படுகிறார்களே என்பதற்காகக் காலவேகம் வேலை நிறுத்தம் செய்யுமா? தடையும், எதிர்ப்புப் படையும் அந்த வேகத்தை அதிகப்படுத்துகின்றன. இராவண காவியத்தை இந்த மனநிலையின் கனியயெனக் கொள்ள வேண்டும். இதுவும், அந்நாள் இராமாயணம் போலக் | |
|
|