90. என்னா முன்னே யுடனடுங்க வினையே லுன்னைப் பிரிந்திருக்க என்னா லாமோ வின்னேயோ லீங்கு நாளை வாரேனேல் தன்னோர் துயர வயலாரைச் சார்ந்து பின்னுந் தன்னோருக் கின்னா செய்யுங் கொடியோரி னின்னா விடரை நண்ணேனோ. 91. என்று தேற்றித் தமிழ்நாடன் இனியா டன்னைத் தன்னாயம் சென்று கூடச் செலவிட்டுச் செல்லு முள்ளந் தனையுரனால் ஒன்று கூட்டித் தன்கண்ணை யொல்லுந் துணையா வுடன்கூட்டிச் சென்று கூடச் செலவிட்டுச் சென்றான் காண நின்றானே. | கலி விருத்தம் | 92. அன்னவ ளாயஞ்சேர்ந் தாடல் கண்டுமே தன்னிரு கண்களுந் தமிய ராய்வரப் பொன்னியல் பாவையைப் புலம்ப விட்டுநீர் இன்னண மெதற்குவந் தீரென் றேசினான். 93. ஏசிய பின்னவ னிரக்கங் காட்டியே பாசிழை நிலைமையைப் பார்த்து வந்துபின் ஊசலா டியவுள மொடுக்கிக் கொண்டுதன் நேசர்கள் தங்கிய நிலையை யெய்தினான். ------------------------------------------------------------------------------------------- 90. தலைவி யுடல் நடுங்கினாள். இன்னா - துன்பம். இன்னா இடர் - கடுந்துன்பம். (கள. 10) 91. ஆயம் - தோழியர் கூட்டம். உரன் - கடைப் பிடி, அடக்கம், கலங்காது துணிதல் முதலியவலி. கண்ணைக் கூட்டிச் செல்லும்படி அவட்குத் துணையாக விட்டானென்க. ஒல்லும் - பொருந்திய. 93. தமி - தனி. புலம்ப - தனியாக. | |
|
|