பக்கம் எண் :


204புலவர் குழந்தை

   
        94.     அற்றைநாட் போலவே யலங்கல் மார்பனும்
               மற்றைநா ளும்பசு மயிலை முற்றைநாள்
               பெற்றவப் பொழிலிடைப் பெற்று மற்றுமப்
               பொற்றொடி யோடுளப் புணர்ச்சி யுற்றனன்.

        95.     உண்ணிய பெருமையோ டுரன்கொள் நம்பியும்
               அண்ணிய மடம்பயிர்ப் பச்சம் நாணமென்
               றெண்ணிய பெருங்குணத் தியன்ற நங்கையும்
               கண்ணிய படியுளங் கலந்தொன் றாயினர்.

        96.     கண்மணி போலவன் கருதப் பெற்றவப்
               பெண்மணி பாலுளம் பிரிந்த தன்மையால்
               விண்மணி போலொளி விளங்கு மேனிமா
               சுண்மணி போலொளி யுயங்கி னானரோ.

        97.     அன்னவன் நிலைமையை யறிந்த தோழர்கள்
               ஒன்னலர்க் குடைகிலா வுரனு முன்னொடு
               மன்னிய பெருமையு மடங்கச் சீரிழந்
               திந்நிலை யுற்றமை யென்கொ லென்றனர்.

        98.     உற்றவா றுரைக்கவவ் வுரிமை யாளரும்
               மற்றவள் நிலையினை யறிந்து மன்னனைச்
               சொற்றது தவறெனத் துணைமை செய்திடப்
               பெற்றவள் காதலைப் பெருக்கி வந்தனன்.

        99.     மாதமிழ் விளங்குற வருமி ராவணம்
               தாதவிழ் பூம்பொழிற் றகழி தன்னிலங்
               கோதையின் காட்சியாங் குளிர்ந்த நெய்யினால்
               காதலங் கொழுந்துவிட் டெழுந்து காழ்ப்புறும்.
-------------------------------------------------------------------------------------------
        94. உள்ளப்புணர்ச்சி - மெய்யுற்றுப் புணராது உள்ளத்தே காதலன்பு கொள்ளுதல். 95. இது, இடந்தலைப்பாடு. (தொல். களவு-9, 10) 96 விண்மணி - சூரியன். மாசு உண்மணி. மாசு - அழுக்கு. உயங்குதல் - வாடுதல். 97. இவையிரண்டும் பாங்கற் கூட்டம். பெருக்கி வந்தனன் என்பது தோழியிற் கூட்டத்தை. 98. இவையிரண்டும் பாங்கற் கூட்டம் பெருக்கி வந்தனன் என்பது தோழியிற் கூட்டத்தை. 99. இராவணம் - விளக்கு. தாது - பூந்துகள். தகழி - விளக்கின் அகல். காழ்ப்புறல் - உறுதியாக நின்றெரிதல்.