பக்கம் எண் :


210புலவர் குழந்தை

   
         35.   அனையவ னென்றாற் பழியதி லில்லை யன்றேபோல்
               இனியவன் வந்தா லென்மன மேனோ விடருண்ணும்
               தனியிட மேனோ வென்னை விடாது தடைசெய்யும்
               எனினுமே யுருவங் காணி லுவக்கு மியல்பென்னே.

         36.    வரைந்தே கென்றால் தோழி யிடத்தும் வாய்பேசான்
               பொருந்தா வணியும் பூவுஞ் சாந்தும் புலமுண்ணும்
               வருந்தா வுள்ளம் செந்தமி ழாலென் வாய்பேசா
               தெரிந்தே வந்து மாவது செய்யார் தெரியாரே.

         37.    கொழுகொம் பில்லாக் கொடியெவ் வாறோ கொடியாருக்
               கெழுகொம் பாகிப் பூத்து மணந்தே யிளங்காயாய்
               கழகம் பெறவே தீங்கனி தந்து களிப்பிக்கும்
               கொழுநன் படராப் பெண்கொடி படராக் கொடியன்றோ.

         38.   தாயோ துஞ்சாள் நோயறி யாவத் தாய்துஞ்சின்
               நாயோ துஞ்சா நிலவொடு பொல்லா நாய்துஞ்சின்
               வாயோ துஞ்சாக் காவலர் துஞ்சின் மலர்துஞ்சும்
               போயே தொலையென் றாளது முண்மைப் பொருளன்றே.

         39.    முன்னிகழ் வென்னெல் லாமோ வின்ன முறையோதிப்
               பொன்னம் பாவை யின்னெழில் வேட்கும் பூங்கொம்பும்
               அன்னம் பிரியப் பேடையை யந்தோ வருளில்லார்
               தன்னந் தனியே சிறையினி லிட்ட தகையானாள்.

         40.    உண்ணாள் பாலு மூட்டாள் கிளியு முளமாரப்
               பண்ணாள் யாழும் பாடா ளிசையும் பழகாயம்
               நண்ணாள் குரவை நாடாள் பாவை நற்பூவை
               எண்ணா தெண்ணிப் புண்ணா வாள்பக லிரவெல்லாம்.

         41.    பொன்னும் மணியும் புனையாள் பூவும் பொன்னுடையும்
               என்னிவ் வென்றே யெறிவா ளேவைக் குறியாளே
               முன்னங் காணும் பொருள்களை யெல்லா முத்தாடித்
               தன்னந் தனியே யோவம் போலத் தனிநிற்பாள்.
-------------------------------------------------------------------------------------------
         35. மெய் -17 36. மெய் -18 37.கொடியார் - கொழுகொம்பு நாட்டார். கழகம் - கூட்டம். 38. மலர் - கண். போயேதொலை யென்றது - உடன்போக்கு. அன்று மறுத்தவள் இன்று இச்செறிப்புற்றுக் கூறினாள். 39. வேட்கும் - விரும்பும். 40. பழகு ஆயம் - பழகிய தோழியர் கூட்டம். 41. ஏவு - ஏவுதல்; தோழியரை எதற்கும் ஏவாள்.