1. கதிரவன் தோற்றம்
|
| ழுஅளித்தகை யில்லா வாற்ற லமைந்தவன் கொடுமை யஞ்சி வெளிப்பட வரிதென் றுன்னி வேதனை யுழக்கும் வேலை களித்தவர் களிப்பு நீங்கக் காப்பவர் தம்மைக் கண்ணுற் றொளித்தவர் வெளிப்பட் டன்னக் கதிரவ னுதயஞ் செய்தான்.ழு |
-கம்பராமாயணம் : அணிவகுப்புப் படலம் - 24 (சூரியன், இராவணன் கொடுமைக்கு அஞ்சி வெளிவரமுடியாமல் வருந்திக்கொண்டிருக்கும்போது, இராமன் படையைக் கண்டு வெளிப்பட்டான்.) |
| ழுஇருண்டபே ரிருளை நீக்கி இளங்கதிர்ச் செல்வன் துப்பில் திரண்டுமே பொருது வென்று சென்றவர் போக மண்ணிற் புரண்டுமே யுயிரை நீத்துப் போனமா மறவர்க் கின்றோ டிரண்டுநா ளாயிற் றென்ன எண்ணுவான் போல வந்தான்ழு |
-இராவண காவியம் : இரண்டாம் போர்ப் படலம் - 1 (துப்பு - வலி. துப்பில் திரண்டு - வலிமிக்கு) |
2. கதிரவன் மறைவு |
| ழுதன்றனிப் புதல்வன் வென்றித் தசமுகன் முடியில் தைத்த மின்றளிர்த் தனைய பன்மா மணியினை வெளியிற் கண்டான் ஒன்றொழித் தொன்றா மென்றவ் வரக்கனும் ஒளிப்பான் போல வன்றனிக் குன்றுக் கப்பால் இரவியும் மறையப் போனான்.ழு |
-கம்பராமாயணம் : மகுடபங்கப் படலம் - 41 |
(சூரியன் மகனான சுக்கிரீவன் இராவணனது மணிமுடியைச் சிதைக்க இராவணன் அங்கு நின்று சென்றதுபோல, மகன், வென்றிகண்ட மகிழ்வால் சூரியனும் மறைந்து சென்றான்.) |
| ழுகுருதி யாடிக் குவிபிணக் காடணர் பரவை போலப் படர்செங் களத்தினை பரிதி காணப் படாதெனச் செல்லவே இரவு வந்த தினுங்கொலு வேனெனா.ழு |
-இராவண காவியம் : முதற்போர்ப்படலம் - 77 (அணர்தல் - மேல் நோக்கி எழுதல். பரவை - கடல்) |
விரிக்கிற் பெருகும், புலவர் குழந்தை பெருங்காப்பியத்திற்குள்ள இலக்கண முறை சிறக்கச் செய்துள்ளார். கவிச்சுவை, ஓசை, உவமைகள், அணிகள் அழகுடன் அமைந்துள்ளன. அகம் புற இலக்கணங்களில் கூறப்படும் களவு, கற்பு, போர் முறை, வீரம் |