11. நல்லவை யுரைத்தும் நாடொறு மொழுகும் நன்மனை யறத்தினின் வழுவா தல்லவை கடிந்தும் பெருந்துணை புரியு மறிவர்தம் வாய்மொழி யதனைப் புல்லியே வரம்பு கடந்திடா தியல்பு பொருந்திநல் லொழுக்கினைக் கைக்கொள் வல்லியே யுன்னை மனைவியா யடைந்த வாழ்வினுக் குவமைநல் வாழ்வே. 12. காணுதற் கரிதாய்க் காவலோ பெரிதாய்க் களவெனக் கண்டவர் பழிக்க நாணுதற் குரிய தென்றுமே யுள்ளம் நைந்துநொந் துருகிய வதுவே பூணெனப் பூணும் பொன்மணிக் கலனைப் பொறுத்திடை நுடங்குபொற் பாவாய் மாணுறத் திகழு மனையற மதனை வகுத்துத வியபெரு வள்ளல். 13. அன்றிது தகாதென் றுரியகா ரணத்தோ டறைந்துமேற் கோளுட னதையே இன்றிது தகுமென் றன்றெனக் குரைத்த விரண்டையு மாங்கெதிர் மறுத்தே ஒன்றெனக் கொண்டு மயங்கிடப் பார்ப்பான் உரைத்திடுங் கூற்றினைப் பார்க்கின் நன்றெது தீதி யாதெனத் துணியா நறுநுதா லென்னுள நலியும். 14. காதலங் கயிற்றா லொன்றுற விறுக்கிக் கட்டியே யிணைபிரி யாமல் தீதற நீதா னெனப்படா தொன்று சேர்ந்தவ ரேமனை யாரென் றோதுவர் பொருணூ லுளப்பட வாராய்ந் துண்மைகண் டுளதமிழ்ப் பெரியோர் ஆதலா லொருவர்க் குறுவது பிறர்க்கு மாகுமென் றறிபசு மயிலே. ------------------------------------------------------------------------------------------- 11. கற்-3. 12. களவே மனையறத்தை யுதவிய வள்ளல் ஆம். பழித்தல் - அலர் தூற்றல். பொறுத்தல் சுமத்தல். (கற்-5:5). 13. அன்று - களவுக் காலத்தில் (பொது.41. 14. பொருள் நூல் அகப்பொருள் நூல். (கற்-5:7) | |
|
|