பக்கம் எண் :


236புலவர் குழந்தை

   
        19.     நோயெனத் தாயன் றையுறத் தோழி
                    நுன்றனை நோக்கவே நீயும்
               வாயிலா வூமா யினைமண மென்னில்
                    வந்துவண் டார்க்குழ லென்றா
               தாயதை யோட்டத் தயங்குவ ளென்றா
                    தந்தைதாய் சொன்மறா ரென்றா
               சேயிதழ் வெண்பற் கருங்குழற் பசும்பொற்
                    செறிதொடி யெனநகை யாடும்.

        20.     வேலினை யெடுக்கச் செலாமுன மன்றுன்
                    விழியெனுந் தாமரை முத்த
               மாலையை யுனது மார்பினி லிடவே
                    வாகைநீ சூடினை யென்றவ்
               வேலினை யெறிந்து தோற்றவன் போல
                    வெருண்டுமே பெயர்ந்திடா நிற்கம்
               மாலையை யெடுத்தென் வெருவினைத் தவிர்த்த
                    மறத்திநீ யெனநகை யாடும்.

        21.     அன்றுநான் றந்த தழையுடைக் கீடா
                    வன்னமே வடவரை யோட்டி
               வென்றிகொடி லங்கை மாநகர் முன்றில்
                    மேவவு மூரவர் சூழ
               மன்றலந் தொடையல் சூட்டினை தமிழ
                    மக்கள்செய் நன்றியை மறவார்
               என்றுதொன் னூல்கள் நுவன்றிடு மதனுக்
                    கிலக்கியம் நீயென வுவக்கும்.
-------------------------------------------------------------------------------------------
        19. நோய்தீரு மருந்து மணம் (மணவினை) என்னில், குழல் வண்டு ஆர் என்றா - கூந்தலில் அம்மணத்திற்காக வண்டு மொய்க்கு மென்றா. ‘வண்டார்குழல்’ எனப் பெயர் கூறியவாறு. தாய் - செவிலி. ஓட்டத் தயங்குதல் - வரைவை யுடன்படல். தந்தை நற்றாயின் சொல் மறார். இது, நீ அறத்தொடு நிற்கின் தோழி செவிலிக்கும், செவிலி நற்றாய்க்கும், நற்றாய் தந்தைக்கும் அறத்தொடு நின்று மணமுடிப்பர். அன்று மணத்தை விரும்பாமல் களவொழுக்கத்தை விரும்பியா பேசாமலிருந்தாய், என நகையாடியவாறு. 20. தலைவன் வேலை யெடுக்கப் பகைவயிற் பிரிவெனக் கொண்டு கண்ணீர் உதிர்த்தாள். அவள் வருந்துதற் கஞ்சிய தலைவன் வேலை யெறிந்து செலவொழியக் கண்ணீரைத் துடைத்து நோக்க அச்சம் நீங்கினாள். முத்தமாலை - கண்ணீர் (கற். 5:24). 21. இது, தசரதன் முதலியோரை யோட்டியது. (கற். 5:31)