பக்கம் எண் :


244புலவர் குழந்தை

   
        35.     உறுப்பி னிற்றிப் புடையது கண்ணென வுவப்பிற்
               சிறப்பு மேயதைக் கண்ணெனச் சேர்ப்பர்கட் புலனை
               மறுப்ப தாரருங் கண்ணினுஞ் சிறப்புடன் மதிக்கும்
               உறுப்ப தாமிதை முதற்செயு முழைப்பினை யுலகில்.

        36.     ஆகை யாற்றமிழ் மொழியினை யையமில் லாமல்
               சேகை யோடெலா மக்களுங் கற்றிடச் செய்தல்
               ஓகை யோடுறும் பகைவரை வெந்நிட வோட்டி
               வாகை சூடிய தாகுமா மன்னருக் கென்றான்.

        37.     என்று சொல்லவும் பேரவை யிருந்தவ ரெல்லாம்
               நன்று நன்றுபே ரண்ணலே நல்லவோர் விதுவே
               ஒன்று மொன்றுமென் றுவப்புற வண்ணலு மேலும்
               நின்ற யாவையு மெடுத்தியம் பிடமன நேர்ந்தான்.

        38.     முந்தை யோர்நனி முயன்றுமே யியன்றநன் முறையிற்
               செந்த மிழ்த்தனிச் சொற்களாற் செய்ததொன் னூலாந்
               தந்தை தாயன விலக்கண விலக்கியந் தம்மை
               மைந்த ராகிய நாம்நனி போற்றுதல் மரபாம்.

        39.     இயன்ற மட்டிலு முதியவே டுகள்பெயர்த் தெழுதி
               முயன்று செம்பொருள் படவுரை யெழுதிநன் முறையின்
               பயன்ற ரும்படி மக்களுக் கோதியும் பழைய
               நயன்ற ருந்தமிழ் நூல்களைப் போற்றுதல் நலமாம்.
 
அறுசீர் விருத்தம்
 
        40.     முன்னோர்கள் கையாண்ட மொழிவழக்கும்
                    பொருள்வழக்கு முதிய வாகிப்
               பின்னாளி லிருப்போர்க்கு விளங்காமற்
                    பொருளையம் பிறக்கு மானால்
               முன்னூலி னியல்சிறிது மாறாமற்
                    பொருள்விளங்க முறைமை யாக
               அந்நாளுக் கேற்றபடி வழிநூல்செய்
                    தேபோற்ற லமைவ தாகும்.
-------------------------------------------------------------------------------------------
        35. முதல் செயல் - முதன்மையாக - மேம்படச் செயல். 36. சேகை - செம்மை, நன்றாக. ஓகை - உவகை. வெந் - முதுகு. வாகை - வெற்றி 37. ஓர்வு - கருத்து. ஒன்றும் - பொருந்தும்.