53. தன்னேருந் தமிழ்வளர விலக்கியமு மிலக்கணமுந் தகுதி யாக முன்னோர்கள் செய்துவைத்த முதற்சங்க விச்சங்க முதுநூ லெல்லாம் பொன்னேபோற் போற்றியிருந் தமிழரெலாங் கற்றுநலம் பொருந்தி வாழ என்னாலீங் கியன்றபடி செய்துவரு கின்றேன்மனி ணைத்தாய் போல. 54. எப்போது நடந்துவரு வதுபோன்றே தமிழகத்தி னெல்லாப் பாலும் தப்பேது மில்லாத புலவர்கள்செய் தேகொணருந் தமிழ்நூல் தம்மை ஒப்பாரு மில்லாத முத்தமிழி னறிஞர்பல ரொருங்கு சூழ இப்போது மரங்கேற்றி வருகின்றேன் சிறப்புடனே யிதுவு மன்றி. 55. ஓங்குதமிழ்ச் சங்கத்தே முத்தமிழின் கரைகண்டே யுயர்வு பெற்ற பாங்குடையார் தமைக்கொண்டு முத்தமிழு முறையாகப் பயிற்று வித்தே ஆங்குபயின் றார்தம்மைத் தமிழகமெல் லாமனுப்பி யன்னார் தம்மால் தேங்குபுகழ் முத்தமிழும் பயிற்றுவி்க்க வேற்பாடுஞ் செய்துள் ளேனால். 56. அன்னவர்தம் வாழ்வியலுக் காவனவெல் லாம்புரிவ தாலே யன்னார் தன்னலமென் பதுவின்றித் தாய்மொழியை வளர்ப்பதுவே தமது நீங்கா மன்னியநீள் கடனென்று குன்றாமற் றமிழ்வளர்த்து வருகின் றார்கள் முன்னருமோர் செலவின்றி யேபயின்றா ரஃதான்று முறைமை யாக. ------------------------------------------------------------------------------------------- 54. இணைத்தாய் - செவிலி. | |
|
|