பக்கம் எண் :


250புலவர் குழந்தை

   
        61.     ஆகையினால் வேளாண்மை யெனுமொழியி
                    னுட்பொருளை யறி்ந்தே நாளும்
               ஓகையினால் தாளாண்மை யோடுலக
                    நிலைபெறவே யுழுவோர் செங்கை
               வாகையினால் ஆளாண்மை நடைபெறுத
                    லன்றிமுடி மன்னர் தங்கள்
               ஈகையினால் ஆகாமை யறிந்துநலஞ்
                    செயலரசர்க் கியல்பா மன்றி.

        62.     ஒருவந்த தமிழ்மக்க ளொருவருண
                    வொருவர்பசித் துழல்கை யின்றித்
               திருவந்த வொருநிகரா யினிதுண்டு
                    நனிவாழச் செய்த லோடு
               கருவந்த தகவுடையார்க் கலுவலருந்
                    தவறுதலாய்க் கறுத்தே யாதும்
               வெருவந்த செய்யாம லினியனவே
                    செயலரசர் மேற்கோ ளாகும்.

        63.     மன்னவர்க்கா வுளருலக மக்களெனு
                    மெண்ணமதை மறந்தே மன்னர்
               அன்னவர்க்கா வுளரெனுமெய் நிலையுணர்ந்து
                    குறையொன்று மடையா வண்ணம்
               முன்னவர்க்கா வனசெய்து புறங்காத்தல்
                    மன்னவர்க்கு முறையே யாகும்
               பொன்னலர்க்கா வகம்பொலியு மீயுயர்முள்
                    வேலிபயிர்ப் புறங்காப் பன்றோ.

        64.     நாற்றிசையு மிசைபுகுமூ ரகமேயோர்
                    நாட்டினுயிர் நாடி யாகும்
               பேற்றையறிந் தூர்மக்க ளொற்றுமையாய்
                    வாழ்க்கைநலம் பெருகி வாழ்தற்
-------------------------------------------------------------------------------------------
        61. வேளாண்மை - உதவி, பயிர்த் தொழில். ஓகை - உவகை. ஈகை பொன், கொடை. 62. ஒருவந்த - ஒருமையான. திருவந்த ஒரு நிகராய் ஒரே நிகரான செல்வத்தையுடையவராய். கறுத்து - சினந்து. வெருவந்த குடிகள் அஞ்சத்தக்க காரியம். மேற்கோள் - மேன்னை. 64. ஊரகம் கிராமம். (பல சிற்றூர்கள் கொண்டது)