கேற்றமுறை யினின்மக்க ளுடன்பாட்டோ டெச்செயலு மியற்றி நாளும் போற்றிநலம் புரிகுவதே யூராளர் கடமையெனப் பொருணூல் கூறும். 65. முறையற்ற படிநடந்து நோய்க்கிடங்கொ டாதபடி முதுநூ லெல்லாம் அறைவுற்ற நலவழியின் படிநடந்து நாடொறுநோ யற்ற வாழ்வே குறைவற்ற செல்வமெனும் மொழியதனைக் கடைப்பிடியாய்க் கொண்டே வாழ்நாள் நிறைவுற்று மக்களெல்லாம் நல்வாழ்வு பெறச்செயலே நெறிமை யாகும். 66. சோம்பலினா லிளமையைவீண் கழிக்காம லெதிர்காலத் துணைமை யாகித் தேம்பழன மதுபோலத் திருவாக்கிப் பெருவாழ்விற் செறித்தே யுள்ளக் கூம்புதலை யலர்வித்துத் தாய்நாட்டுப் பெருஞ்செல்வக் குவையார் தொம்பை யாம்பலகைத் தொழில்புதிய முறைபயின்றெல் லோருமுயர் வடைய வேண்டும். 67. வேலையதற் கேற்றபடி செய்பொருளின் மதிப்பமைத்தவ் வேலைக் கேற்ற கூலியது பெற்றுமன வெழுச்சியுடன் தொழில்வளர்க்குங் கொள்கைத் தாகிச் சோலையிடைத் தேனுண்ணுந் தும்பியெனத் தொழிலாளர் தொழுதி யுள்ளச் சாலையிடைப் பேருவகை நடமாடச் செயலரசர் தமக்கேற் பாகும். ------------------------------------------------------------------------------------------- 65. நலவழி - சுகாதாரம். 66. குவை - குவியல். தொம்பை - நெற்குதிர், பணப்பெட்டி. | |
|
|