28. சிதறிய பலசிறு நாடு சேர்ந்ததாய் முதிரிய பெருவள மொய்த்து முத்தமிழ் ததரிய தமிழகந் தன்னி னின்றுமே விதரியே யிருந்ததவ் விந்த நாடரோ. | 2. ஆரியப் படலம் | ஷ வேறு வண்ணம் | 1. தாய கத்த தமிழக விந்தமாம் சேயி டத்த சிறப்பினைக் கண்டனம் ஆயி டைப்புகுந் தாரிய ரென்பவர் மேயி டுக்கண் விளைத்தமை காணுவாம். 2. மஞ்சு கண்படு விந்த வடக்கினில் துஞ்சு தண்பனி தோய்மலைத் தெற்கினில் எஞ்ச நின்ற இடைப்படு பாங்கரில் வஞ்ச நெஞ்சுடை ஆரியர் வாழ்ந்தனர். 3. நனிமி குபழங் காலையந் நஞ்சனார் பனிம லைவட மேற்குள பாங்கரில் கனிதொ டர்குரங் காமெனக் காடலைந் தினிது வந்தன ரீங்கென வோதுவர். 4. என்று மோரிடத் தேநிலை கொண்டிடார் சென்று கால்செல் திசையிற் பழுமரக் குன்று மேவுங் குரீஇயினம் போன்றவண் ஒன்றி வாழுநா டோடி யொழுக்கினர். 5. ஆங்க னார்வந் தடைதரு முன்னரே வீங்கு சிந்து வெளியில் தமிழர்கள் ஓங்கு நாகரி கத்தொ டுலகினர் வாங்க வாவிட வாழ்ந்துமே வந்தனர். 6. முன்ன ரெங்குங்கா ணாத முதிரிய மன்னி யாயிடை வாழ்ந்த தமிழர்தம் தன்னி கர்த்த தகவுறு வாழ்க்கையைக் கன்னல் காணுங் களிறெனக் கண்டனர். ------------------------------------------------------------------------------------------- 28. ததரிய - செறிந்த. விதரி - நீங்கி 2. கண்படுதல் - தங்குதல். | |
|
|