பக்கம் எண் :


262புலவர் குழந்தை

   
       14.     தன்ன லமது தாங்க லலாற்பிறர்
              எந்ந லமும றிந்திடா ரென்னினும்
              பொன்னி னோடு பொருளடை யப்பிறர்க்
              கின்னல் செய்வதி லொப்பு மிலாதவர்.

       15.     உடலு ழைப்பிலா துண்ணுதற் கெண்ணுநர்
              படைவ லியதி லாது படைவலி
              உடையர் தம்மையு மூறிய சூழ்ச்சியால்
              அடிமை யாக்கித் தலைமைகொ ளவ்வியர்.

       16.     தாங்க ளன்றி யெவருந் தலைவராய்
              ஓங்கல் காண வுடன்படா வுள்ளத்தர்
              தாங்க ளேயறி வாளர் தமையலார்
              மூங்கை யென்றெணு மூழ்கிய சூழ்ச்சியர்.

       17.     பண்டு தொட்டய லாரின் பருப்பொருள்
              கொண்டு தங்கள் குலத்தொழி லாமென
              உண்டு வாழ்வத லாலுரி மைப்பொருள்
              கண்ட தில்லையோர் காணியு மில்லையால்.

       18.     தங்கி யோரிடந் தன்னில் நிலைத்திரா
              தங்கு மிங்கு மலைந்து திரியுநர்
              எங்குச் செல்லினு மெப்படி யாயினும்
              தங்கள் வாழ்வு தமக்கெதுஞ் செய்யுநர்.

       19.     பேற்றிற் கேற்பப் பிறப்பி னிடைப்படும்
              ஏற்றத் தாழ்வுடை யீரிரண் டாமின
              வேற்று மைப்பட லோடவர் மேவுறா
              ஈற்றி னிற்ப டினப்பிரி வுமுளார்.

       20.     கன்னி மக்களுங் கன்னி மணந்தயற்
              றுன்னி மக்களுந் தோட்டுணை யற்றவோர்
              பன்னி மக்களும் பாங்குடை மக்களா
              மென்ன வெட்க மிலாதுரை யிம்மியர்.
-------------------------------------------------------------------------------------------
       19. ஈற்றினிற் படுவோர் - மேல்நால்வருங் கலந்து பிறந்த கலப்புக் குலத்தினர். 20. அயல் துன்னி - அயலானைக் கூடியவள். தோள்துணை - கணவன். பன்னி - பெண். இம்மியர் - ஒழுக்கமற்றவர்.