பக்கம் எண் :


இராவண காவியம் 265

   
        36.    அருமை யாம்பொருள் யாவுமே தங்களுக்
              குரிய வென்று முலகினர்க் கன்னவை
              அருளி னானுகர் வாக்கியு ளேமென்றும்
              பொருளி லாது புளுகிடும் பொய்யர்கள்.

        37.    துன்னும் பூசுரத் தொண்டினைச் சூத்திரர்
              பின்னர் நீப்பினிப் பேருல கங்கெடும்
              அன்ன ரையொறுத் தப்பணி யாக்கலே
              மன்ன வன்கட னாமெனும் வஞ்சகர்.

        38.    நாற்கு லத்தவ ருக்குமந் நஞ்சனார்
              பாற்ப டுத்த குலத்தொழில் பாங்குடன்
              ஏற்ப டுத்தபோ லென்று நடந்திடக்
              காற்ப டுத்தலே மன்னன் கடமையாம்.

        39.    பேறு பெற்ற தமிழர் பிறப்பொருங்
              கூறு பட்ட வொழுக்க முடையவர்
              மாறு பட்டு வகைவகை யாகிய
              வேறு பட்ட வொழுக்க மிகுத்தவர்.

        40.   ஆள்வி னைக்குறு மான்முத லாகிய
              நாள்வி துப்ப நடக்கு முயிர்களைக்
              கேள்வி யற்றவை கீழவை யென்றுமே
              வேள்வி யென்கொள் றுண்ணும் மிதவையர்.

        41.    பொய்யை மெய்யெனப் பொத்திப் புலவினைச்
              செய்யுந் தீயினைத் தேவர் களுக்குணாப்
              பெய்யும் வேள்விய தென்னப்பொய் பேசியே
              உய்யு மூனுட லுண்டு வருபவர்.

        42.    கொள்ளை கொண்டு குலவு முயிர்களை
              அள்ளி யுண்டு மமைகிலா ரங்ஙனே
              வள்ள மொண்டு மயக்குஞ்சோ மக்கொடிக்
              கள்ளை யுண்டு களிக்கங் கயவர்கள்.
-------------------------------------------------------------------------------------------
        39. ஒருங்கு ஊறுபட்ட - ஒன்றாக ஊறிய. 40. விதுப்பு - நடுக்கம். மிதவை - உணவு.