43. பின்னர் மேன்மை பெறவும் பிறர்தமை அன்ன ரோவென வஞ்சி மதிக்கவும் அன்னர் தம்வர லாறென வம்மமுன் சொன்ன பொய்சில சொல்லுது மின்னெனா. 44. இன்பு றுதக வெய்த விரும்பலும் துன்பு றுதக தோய வெறுத்தலும் மன்ப தைக்கியல் பாய மனநிலை என்ப தையுணர்ந் தேயதற் கேற்பவே. 45. இன்ப மிக்க திளமை கெடாதது துன்ப மற்றது தூக்க மிலாதது தென்பு மிக்கது செம்பொன் னிலத்தது மன்ப தைக்கலா வானவர் வாழ்வது. 46. தருவொ டானுந் தருமுளத் துற்றதை மருவுஞ் சாவா மருந்துமொர் நோயிலைக் கருவு மில்லைக் கவவையு மில்லையாற் பொருவி லாதது பொன்னுல கென்பது. 47. இளமை தீர்கிலா தென்று மெழினல வளமை யோடு வனப்பி னின்றவா வுளம கிழவின் பூட்டு மியல்பமை அளவு மேய வரம்பையர் வாழ்வது. 48. இன்னு மின்புறற் கேற்றவை யாவையும் மன்னி யின்றிவை யென்னும் வழக்கிலாப் பொன்ன் னுலகிற் பொருந்திவாழ் தேவர்கள் என்னுங் கண்க ளிமைத்த லிலாதவர். ------------------------------------------------------------------------------------------- 46. தரு - கற்பகத்தரு முதலியன. ஆன் - காமதேனு. உளத்து உற்றதைத் தரும் - விரும்பியதைக் கொடுக்கும். சாவா மருந்து - அமிழ்து பொருவு - ஒப்பு. 47. இயன்று அவாவு உளம். என்னும் - என்றும். | |
|
|