பக்கம் எண் :


இராவண காவியம் 267

   
        49.    எண்ணி யவுரு வோடுல கெங்கணும்
              நண்ணு வார்மன நாடிய யாவையும்
              பண்ணு வார்மன் பதினொரு மூவராம்
              விண்ண வர்வழி மேவினோர் தாமென்பர்.

        50.    மூவ ரோடறு மூவரு முப்பத்து
              மூவ ரெண்டிசை மூதருந் தாங்குமிப்
              பூவர் தம்மைப் புறந்தர வந்தபூத்
              தேவ ரென்றுபொய் செப்பும் புளுகர்கள்.

        51.    இன்ப மற்ற திழிஞர்கள் வாழ்வது
              துன்ப மிக்கது தோய்புன் மலத்தது
              புன்பு லப்புழுப் புல்லியே நச்சுயிர்
              தென்பு லத்திடர் செய்யு நிரயமே.

        52.    ஈவி ரக்கமி லாத கொடியவர்
              கூவக் கூவக் கொலைபுரி வன்கணர்
              ஆவி யைகொ டலைப்பவர் வாழ்துயர்
              ஓவி லாத நிரய வுலகமே.

        53.    அறம்பு ரிந்தவர் பொன்னுல காளுவர்
              மறம்பு ரிந்தவர் வைகுவர் வல்லிருள்
              அறந்த மக்களித் தன்பொடு பேணுதல்
              மறந்த மைமதி யாமையென் வஞ்சகர்.
-------------------------------------------------------------------------------------------
        49. பதினொரு மூவர் - முப்பத்து மூவர். 12. சூரியர், 8 வசுக்கள், 11 உருத்தியர், இரு மருத்துவர். முப்பத்து மூன்று கோடி யென்பர். 50. மூவர் - அயன், அரி, அரன், அறுமூவர் - சாரணர், சித்தர், விஞ்சையர், பைசாசர், பூதர், கருடர், கின்னரர், இயக்கர், கந்தருவர், சுரர், தைத்தியர், நாகர், ஆகாசவாசர், போக பூமியர், முனிவர், நிருதர், கிம்புருடர், விண்மீன் எண்திசை மூதர் - எண்திசைகாப்போர் - இந்திரன், அக்கினி, இமயன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன். மூதர் - முதியோர் - தங்கள் முன்னோர். பூவர் - இவ்வுலகினர். புறந்தருதல் - பாதுகாத்தல். பூவில் வாழ்தலால் பூத்தேவர். பூ உலகம். 51. நிரயம் - நரக உலகம். மலப்புழு, நச்சுயிர் முதலியன இடர் செய்யும் தென்புலத்தது நிரயம். 53. ஆளுதல் - இன்புற்று வாழ்தல். இருள் - நிரயம். மறம் - பாவம். என் - என்று கூறும்.