61. அறைய வேண்டுமோ வன்னரே செய்துள மறையி னோடு மனுமுத னூல்களிற் குறையி லாது கொளக்கொள வூறல்போல் நிறைய வுள்ளன கண்டைய நீங்குமின். | ஷெ வேறு வண்ணம் | 62. அத்தகை யவட வாரியர் தம்மில் முத்திய கல்வி முதியவர் சில்லோர் மைத்தலை தோய மணித்தலை காய்விந் தத்தினை நாடித் தனித்தனி வந்தார். 63. வந்தவர் தம்மை மணித்தமிழ் மக்கள் அந்துவ ராடையு மங்குடுக் கையும் கொந்திய நீடவக் கோலமுங் கண்டே எந்தவூர் யாவ ரெனவின வுற்றார். 64. மாடுயர் விந்த வடக்கினி லுள்ளோர் தாடக வாற்றுந் தவநிலை யாளர் நாடியே யுங்கணன் னாட்டினைக் காணக் கூடினே மென்று குறிப்பி னுரைத்தார். 65. ஆயவர் தம்மை யருந்தமிழ் மக்கள் தாயினு மன்பு ததும்ப வழைத்துப் போயவ ரில்லிற் புதுவிருந் தாற்றி நேயர்கா ளீங்கு நிலைக்குக வென்றார். 66. அங்கவர் தம்முட னன்பி னளாவித் தங்கி யிருந்து தமிழ்மொழி கற்றும் மங்கல மேய வளம்பல கண்டும் எங்கிது போலென வெண்ணி யுறைந்தார். 67. அங்ஙன மேயவ ரப்புற நாட்டில் தங்கி யிருந்த தமிழர்க ளோடும் பொங்கிய வன்பு பொருந்த வளாவி எங்க ளவரென வின்பொ டிருந்தார். 68. இன்னவ ரிங்ஙன மின்பொ டிருப்ப முன்னவர் போல முறைமுறை யாகப் பின்னருஞ் சில்பல பேர்க ளடைந்து நன்னலஞ் சேர்புற நாட்டி லுறைந்தார். | |
|
|