பக்கம் எண் :


இராவண காவியம் 27

   
     கம்பனின் சுவைமிகு செந்தமிழ்ச் செய்யுட்களை எந்தவகையிலும் குறைத்து மதிப்பிட
நம்மால் இயலாது. ஆயினும், பன்னீராயிரம் பாடிய பாட்டரசன் கம்பன் எழுப்பாத
இன்றமிழ் உணர்வை எழுப்பியவர், தமிழின் அருமையை - இனிமையை - ஏற்றத்தைப் -
பெருமையைத் - தனிப் பெருந்தன்மையை உணர்த்தியவர், கம்பனின் இராமாயணத்தை
இராவண காவியமாக மாற்றியமைத்த தன் மூலம் செந்தமிழ்ப் பெருமக்களின் சிந்தனைத்
தீயை நெய்யூற்றி வளர்த்தவர் புலவர் குழந்தை அவர்கள்.

     இராவண காவியம், பெருங்காப்பிய நிலைகளைச் சிறிதளவும் வழுவிடாமல் மரபு
நிலை களை மாண்புறக் காத்து நிற்கிறது. இது, தமிழில் தோன்றிய
ஐம்பெருங்காப்பியங்களையும், இராமாயணம், பாரதம், காஞ்சிப்புராணம், தணிகைப்
புராணம் ஆகியவற்றின் இலக்கிய நயங்களையும் விஞ்சிய கலைநயமும், காவிய அழகும்,
உணர்ச்சிப் பெருக்கும், ஓசையின்பமும் கனிந்து மிளிரும் ஒரு பெருங்கருவூலமாகத்
திகழ்கிறது. இந்நூல், சொல்லோசைப் பாடல்களின் சுரங்கமாக விளங்குகிறது.

     இராமாயணத்தின் காவிய நாயகன் இராமன் இராவண காவிய நாயகன் இராவணன்.
எனவே, இராவண காவியம் தெற்கேயிருந்து எழுகிறது. ஐந்து காண்டங்கள் - 57
படலங்கள்- 3100 பாடல்களும் தமிழ் தமிழ் என்றே முழங்குகின்றன. இந்நூல் ஒரு
கற்கண்டுக் கட்டி. இராவண காவியம் தெவிட்டாத தேனாற்று வெள்ளம். அதில் சில
துளிகளை நாம் இங்கே சுவைத்து மகிழலாம்.

     பழந்தமிழகத்தின் கல்விநிலை பற்றி ஆசிரியர் பாடுகையில், தாய்மொழிப்
படலத்தில்,
   

 

ஏடுகை யில்லா ரில்லை
     இயலிசை கல்லா ரில்லைப்
பாடுகை யில்லா ரில்லைப்
     பள்ளியோ செல்லா ரில்லை
ஆடுகை யில்லா ரில்லை
    அதன்பயன் கொள்ளா ரில்லை
நாடுகை யில்லா ரில்லை
    நற்றமி்ழ் வளர்ச்சி யம்மா.

தமிழென திருகட் பார்வை
    தமிழென துருவப் போர்வை
தமிழென துயிரின் காப்புத்
    தமிழென துளவே மாப்புத்