| தமிழென துடைமைப் பெட்டி தமிழென துயர்வுப் பட்டி தமிழென துரிமை யென்னத் தனித்தனி வளர்ப்பர் மாதோ. நாடெலாம் புலவர் கூட்டம் நகரெலாம் பள்ளி யீட்டம் வீடெலாம் தமிழ்த்தாய்க் கோட்டம் விழவெலாந் தமிழ்க்கொண் டாட்டம் பாடெலாம் தமிழின் தேட்டம் பணையெலாந் தமிழ்க்கூத் தாட்டம் மாடெலாந் தமிழ்ச்சொல் லாட்டம் வண்டமி ழகத்து மாதோ. |
என்று பாடிப் பாடிப் பரவசமடைகிறார். மற்றும், தமிழ்மொழியின் தோற்றத்தையும் அதன் வளர்ச்சியையும் அறிவியல் கண்ணோட்டத்தோடு பாடியுள்ளார். விஞ்ஞானத்தைத் தமிழில் சொல்ல முடியுமா என்று கேட்பவர்களுக்கு, மொழியியலையே தனித்தமிழ்ப் பாவடிவில் இன்னோசை பயின்ற எழிலோவியமாக்கிக் காட்டுகிறார். அடுத்து இராவணன் கல்வி பயின்ற முறையினைக் கூறும் பகுதி மிகுதியும் சுவை பயப்பதாக உள்ளது: |
| தமிழென ஆசான் சொல்லத் ததும்பிய மழலை வாயால் தமிழ்மொழி யென்னும், பின்னும் தமிழ்மொழி என்ன வெந்தாய்! தமிழ்மொழி யெமது சொந்தத் தாய்மொழி யென்னும் பின்னும் தமிழக மென்ன எங்கள் தாயகம் என்னும் மாதோ. அமிழ்துணும் என்னில் அன்னை அப்பவே தமிழுண் டேனிவ் வமிழ்துவேண் டாம்போ வென்னும்; அமிழ்தது தமிழ்தா னென்ன அமிழ்தமிழ் தமிழ்தா மன்னாய்! ஆமது தமிழ்தா னென்னும் தமிழ்தமிழ் தாக வுண்டு தமிழ்மகன் வளரு மாதோ. |