84. இன்னணம் நந்தம் இராவணன் றோன்றும் முன்னர்பல் லாண்டுகள் முன்னர தாகப் பின்னரு முன்னரும் பின்னரு மாக இன்னல் விளைத்த வியல்பினைக் காண்பாம். | அறுசீர் விருத்தம் | 85. இவ்வகையவ் வடவர்மனைத் துறவிகளாய்த் தமிழ்கற்று மின்னூ லாய்ந்தும் செவ்வியதென் றாரியப்பொய்க் கதைபுகன்று மந்தணர்போற் செம்மை பூண்டும் எவ்வியல்புந் தம்மியல்பென் றேபயின்றுந் தமக்குரிய வியல்பை யார்க்கும் ஒவ்வியதாம் படியெளிதி லங்குமிங்குஞ் சிலகூறி யுவப்புண் டாக்கி. 86. தஞ்சமய நெறிகளைச்செந் தண்மையுட னறனிழுக்காச் சால்பு தாங்கும் நெஞ்சுடைய வறிவரொடு புலவருமாங் கிருக்குமென நினைக்கு மாறு விஞ்சியதஞ் சூழ்ச்சியினாற் சுவையொடுகற் பனைக்கதையா விளம்பி யந்த நஞ்சனைய வஞ்சகர்கள் மன்னரையு மவர்களொடு நம்பச் செய்தார். 87. நீங்கரிய வுறவினுந்தோ ழமைகொண்டு முடியரசும் நிலனாள் வோரும் ஓங்குதமிழ் நாவலரு மந்தணரு மற்றவரு முவப்பக் கூடி யாங்கிருப்ப வன்னாரு மந்தணரி னினமாக வயன்மை நீங்கிப் பாங்குடனே தம்மவரீங் குறற்கனா வழியையெலாம் பார்த்து வந்தார். ------------------------------------------------------------------------------------------- 84. பின்னரும் - தோன்றிய பின்னரும். முன்னும் பின்னும் மறுபடியும் மறுபடியும். 85. செம்மை - புலவுண்ணாமை முதலியன. இயல்பு - ஒழுக்கம். 86. விஞ்சிய - மிக்க. அவர்கள் - அறிவரும், புலவரும். ழுஆரியர் குடியேற்றத்துக்கும், ஆரியக்கலை வளர்ச்சிக்கும் ஆரிய முனிவர்கள் திரை மறைவில் இருந்து கொண்டு முக்கியமான உதவிபுரிந்து வந்தார்கள்.ழு (இராவணப் பெரியார் 50-பக். எம்.எஸ்.பூரணலிங்கம் பிள்ளை.) | |
|
|