92. அன்னாரு மிலையென்றே தலைமறைவாய் நிலவுயிரை யந்தோ கொன்றே முன்னேபோ லுடல்கொழுக்க வுண்டதுட னமையாது முறையொன் றில்லார் சின்னாளில் வெளிப்படையா யுயிர்கொன்று வேள்வியது செய்தே யார்க்கும் இன்னாத செய்தறியாத் தமிழ்நாடர் பெரும்பகைக்கோ ரிலக்கா னார்கள். 93. கள்ளமது புரிந்துவரு வதையறிந்த பழந்தமிழர் கனன்று சீறி உள்ளமது கொதித்தெழுந்தவ் விடத்தைவிட்டவ் வூனர்களை யோட்டி மேலும் வெள்ளமது வருமுன்னே யணைகோலல் நன்றென்ன விழைந்தாங் காங்கே உள்ளவட வரையெல்லாங் கொலைபுரியா தெச்சரித்தே யுறைய லானார். 94. ஆனாலு மவர்கொலையை விடுத்தாரில் நாடோறு மமிழ்த முண்டு தானேமுன் சுவைகண்ட பூனையுறி யுறியாகத் தாண்டல் போல ஏனோரு மவ்வாறே யவர்மறுக்க மறுக்கவினி தினிதென் றுண்டே ஆனாத பெரும்போரை விலைகொடுத்து வாங்கினரே யயலா ரந்தோ. 95. இவர்துரத்த வவரோட விருக்கவிவ ரவர்மேவ விவ்வா றாக அவரகன்று தமதுவட வரசர்களின் பெருந்துணையோ டடையப் பாவம் இவர்தலைவ ரவர்தலைவ ரிருவர்களு மிகல்விளைத்தே யிகலா ராக இவரவரு மாண்டுபல ராண்டுபல பொருதிளைத்தா ரென்னே காலம். ------------------------------------------------------------------------------------------- 94. அமிழ்தம் - பால். ஆனாத - நீங்காத 95. இகல் - பகை, போர். | |
|
|