பக்கம் எண் :


284புலவர் குழந்தை

   
        16.    முறைப்படி யமைத்த வேள்விச் சாலையில் வகுத்த வேத
              முறைப்படி சடங்கை யெல்லா முன்னின்று முதியோர்க் கொண்டு
              நிறைப்பட வரிசை யாக நெடியவர் செய்த வாறே
              குறைப்பட லின்றி முற்றுங் கொழுங்கலைக் கோடன் செய்தான்.

        17.    காரெழு முறைச்ச லென்கோ கனைகட லிறைச்ச லென்கோ
              பேரிடி முழக்க மென்கோ பின்னெதை யன்ன தென்கோ
              சீரிய பலவுங் கள்ளுஞ் சிக்குமென் றுரக்கப் பாடும்
              ஆரியர் மறையி னோசைக் குவமையா னறிகி லேனே.

        18.    ஆரியர் சோமச் சாற்றை யறப்பிழிந் தெடுத்துத் தேக்கிச்
              சீரிய முறையிற் காய்ச்சிச் சிறந்தகள் ளாக்கி னார்கள்
              காரிய முழுது முற்றுப் பெறக்கலைக் கோடன் மன்னா
              நேரிழை மூத்தாள் தன்னால் நிகழ்சடங் கதுவொன் றுண்டால்.

        19.    உரியதைச் செய்வீ ரென்ன உற்றவர் நண்பர் மற்றோர்
              அரசர்க ளமைச்சர் வேள்வி யாசிரி யன்மா ரெல்லாம்
              பரிசெனக் கண்கள் காணப் பார்ப்பதற் கவாவி நிற்கும்
              வரிசையி னிடையே மூத்த கோசலை மானும் வந்தாள்.

        20.    இசைபெறு வேள்விக் காக இயற்றியவ் விடையி னிற்கும்
              திசைதொறுஞ் சென்று மீண்ட சிறந்தவாண் குதிரை தன்னை
              வசையறு கூர்வாள் கொண்டம் மாத்திரை மூத்த மானும்
              விசைகொடு மூன்று வெட்டில் வெட்டியே வீழ்த்தி னாளே.
-------------------------------------------------------------------------------------------
        (20, 21, 25, 26-வால்மீகி இராமாயணம் 14ஆவது சருக்க மொழி பெயர்ப்பு; ழுகௌசல்யை அக்குதிரையை மூன்று கத்திகளால் கொன்றாள். கௌசல்யை ஓர் இரவு முழுவதும் அக்குதிரையோடு கூடியிருந்தாள். ரித்விக்குகள் ராஜஸ்திரீகளை மன்னவர் தட்சணையாகக் கொடுத்ததனால் கைப்பற்றினர்.ழு பண்டித அனந்தாச்சாரியார். ழுகோசலை மூன்று வெட்டில் அக்குதிரையை மிக உற்சாகத்தோடு கொன்றாள். அவள் கலங்கா நெஞ்சோடு ஒருநாளிரவை அக்குதிரையோடு கழித்தாள். ஹோதா அத்வர்யு முதலிய ரித்விக்குகள் இராஐபாரியைகளைப் புணர்ந்தார்கள்.ழு பண்டித மன்மதநாத தத்தர் - ஆங்கில மொழிபெயர்ப்பு. ழுகௌசல்யை அக்குதிரையை வாளால் சில துண்டுகளாக வெட்டி வீழ்த்தினாள். அன்றியும் ஸ்திர சித்தத்துடன் புத்திர பாக்கியம் அடையும் விருப்பத்தால் சாஸ்திர விதிப்படி அன்றிரவு முழுவதும் அவ்வசுவத்தின் அருகே இருந்தாள். ஹோதா, அத்வர்யு, உத்காதா முதலிய யாக கர்த்தாக்கள் உரிய தட்சணைகளைப் பெற்று ராஐபாரியைகளுடன் இருந்து சடங்கு நடத்தினார்கள்ழு - பண்டித நடேச சாஸ்திரியார்.)