36. நஞ்சினுங் கொடிய பாவி நன்னெறி தவறி யாரென் றஞ்சிடா தணுக மெய்காப் பற்றதா யாவி கொள்ள மஞ்சுறை மாடக் கோயில் மலர்பொதிந் திளகு சாயல் பஞ்சணை புரளு மேனி பாரிடைப் புரண்ட தம்மா. 37. கொன்றவர் சென்ற பின்னர்க் கோவெனத் தோழி மார்கள் பொன்றிய யாக்கை தன்னைப் புல்லியே பொதிந்து நெஞ்சங் கன்றியே யையோ வென்னக் கதறியே யன்னாய் உன்னை என்றியாங் காண்பே மென்றே யினையன புலம்ப லுற்றார். | ஷெ வேறு வண்ணம் | 38. யாக்கை படைத்த பெரும்பயனீ தாமென் றோவீ தறமென்றோ ஏக்கை பிடித்த பெரும்பயனீ தென்றோ செருக்குக் கொண்டோதான் சேக்கை படுத்த விளம்புள்ளின் சிறகை யறுக்குந் தீயோர்போல் காக்கை தவிர்த்தோர் தமைக்கோறல் கடனே போலும் மடனேயோ. 39. கையை யறுத்தல் வில்லாண்மை காதை யறுத்தல் நல்லாண்மை மெய்யை விடுத்தை யோமூக்கின் மேலே யறுத்தல் வல்லாண்மை பைய நடந்து கையோடு படையை நகர்ந்து செல்வோரை வெய்ய கணையால் கொலைசெய்தல் விலையில் லாவிற் கலைபோலும். 40. பெண்ணொடு கூடப் பிறந்திலரோ பிறிதோர் பெண்ணை மணந்திலரோ கண்ணில ரோகண் காண்போரைக் கடனாக் கொல்லும் கயமையரோ மண்ணொடு மண்ணோ கருங்கல்லோ மரமோ மற்றென் னோவோதான் அண்ணிய வன்னை தனைக்கொன்றோ ராவோ வென்னென் றறியோமே. ------------------------------------------------------------------------------------------- 38. ஏ - அம்பு. சேக்கை - கூடு. காக்கை - காப்பு. | |
|
|