பக்கம் எண் :


292புலவர் குழந்தை

   
       41.     அல்லாப் படைய வெதிராக
                   ஆவா வொன்றுஞ் செய்யாதும்
              பொல்லாப் புடைய படையோடு
                   பொருவேம் வாவென் றழையாதும்
              கொல்லாப் படையு மயலாரைக்
                   குறுகாப் படையுங் கொடுபோந்த
              இல்லாப் படையா ரினைவேறல்
                   என்னே யாண்மைத் தென்னேயோ.

       42.     அறமோ வில்லை யறமின்றேல்
                   அஞ்சா தடையார் நெஞ்சுண்ணும்
              மறவோ வில்லை மறமின்றேல்
                   மடியா வுள்ளம் மடிவிக்கும்
              திறமோ வில்லைத் திறமின்றேல்
                   தெரியே மொன்றும் படையின்றிப்
              புறமோ வந்த பெண்பாலைப்
                   புலையோர் செய்த கொலையீதே.

       43.     தெரியா தப்பூ டெளிவந்த
                   சிறுமீன் கொத்தும் சிரல்போலத்
              தரியா திப்பா லெதிர்நின்று
                   தவறா தேபெண் கொலைசெய்யப்
              பரியா தெப்போ தினுமொன்று
                   பட்டே சிறிதுங் கட்டாயம்
              பிரியா விப்பா விகள்நாட்டில்
                   பெண்பா லொன்றும் பிறவாதோ.

       44.     பொல்லா முனிவன் றுணையாகப்
                   போந்தார் யாரோ எதிரொன்றும்
              சொல்லா தணுகப் பொருக்கென்று
                   துடிக்கத் துடிக்க வுயிர்கொண்டு
-------------------------------------------------------------------------------------------
       41. அல்லாப்பு - துன்பம். கொல்லாப்படை - கண்ணாகிய வேலும்வாளும். குறுகாப்படை - பெண்டிர். 43. அப்பு - நீர். எளி வருதல் - எளிதாகக் கொள்ளும்படி வருதல். சிரல் - மீன்கொத்தி. இப்பால் - இங்கே. எதிர்நின்று தரியாது - எதிர்நிற்க முடியாது. பரியாது - இரங்காது.