பக்கம் எண் :


இராவண காவியம் 293

   
              நில்லா திமையு மவரிங்கு
                   நின்றே யகன்று சென்றாரே
              எல்லே மிருந்து மயலாரம்
                   பிரையா னாளம் பிரையானாள்.

       45.     இன்னோ ரன்ன பலவாறா
                   இனைந்தே புலம்பி இருந்தேங்கி
              அன்னா யுன்னைத் தனியாக
                   அழைத்தே வந்திங் கறிவில்லேம்
              கொன்னே வடவா ரியரம்பின்
                   குரியாத் தந்தோ மெனவலறித்
              தன்னே தனியாய் மயிலன்னார்
                   சமைந்தே கல்லாய்க் குமைந்தாரே.
 
கலி விருத்தம்
 
       46.     கன்றி யுள்ளங் கதறி யழுதுபின்
              ஒன்றுந் தோன்றிலா தோடி யிரண்டுபேர்
              சென்று கோயிலைச் சேர்ந்துந மன்னையைக்
              கொன்ற னர்வட வோரெனக் கூறினர்.

       47.     கொன்ற னரெனக் கூறிய வெவ்வுரை
              சென்று கூடிச் செவிபுகா முன்னரே
              கன்றி யுள்ளங் கனன்றுமா ரீசனும்
              வென்றி வீரர்க ளோடு விரைந்தனன்.

       48.     விரைந்து சென்றனை மெய்யினைக் கண்டனன்
              கரைந்து நெஞ்சங் கதறி யழுதனன்
              வருந்தி வீய வடவ ருடலினை
              அரிந்து தள்ளுவே னன்னையென் றார்த்தனன்.

       49.     நடலை செய்தவந் நஞ்சன வாரியப்
              படலை யின்றெனப் பண்ணுவே னீங்கென
              மடலை வாரி வருபவன் போலனை
              உடலை வாரித்தன் னூரினை யெய்தினான்.

       50.     செய்தி கேட்டதுஞ் செந்தமிழ்ச் செல்வர்கள்
              பொய்தி யாய்விட்டுப் போயினை யோவெமக்
              குய்தி யில்லையோ வென்றழு தோடியே
              மெய்தி றம்பிய மேனியைக் கண்டனர்.
-------------------------------------------------------------------------------------------
       45. குமைந்து கல்லாய்ச் சமைந்தார். குமைதல் - உள்ளமழிதல். 49. மடல் - பூவிதழ். 50. பொய்தியாய் - இல்லையாக. உய்தி - வாழ்வு.