51. அன்னை யென்றன ராவெனக் கூவினர் உன்னை யென்றனர் ஓடினர் கூடினர் மின்னை வென்றொளிர் வேலினர் வாளினர் என்னை யாயின ரென்று குமுறினர். 52. கொன்ற தாரக் கொடிய கயவர்கள் சென்ற தாவெது வோவெனச் சீறினர் வென்றி வேலினைப் பார்த்து வெகுண்டனர் நன்றி கொன்றவர் நாமென விம்மினர். 53. அஞ்சி லோதியர் ஆவென மேல்விழுந் தெஞ்சி நின்ற விடமிலை யாக்கினர் மஞ்சு தோய்மலை வார்குழல் மூய்தர நெஞ்சு ருகிக்கண் ணீர்முழுக் காட்டினர். 54. ஐயை யோவெம தன்னையே யென்றனர் கைய றைந்து கதறி யழுதனர் செய்ய தாமரைச் செம்முகச் செவ்விபோய் மைய றைந்த மதியெனக் கன்றினர். 55. அச்ச மின்றியவ் வாரியப் புல்லர்கள் இச்செ யல்புரி வாரோ புரிகுவர் எச்ச மின்றி யிழிஞ ரினிப்புகுந் துச்சி லின்றித் தொலைக்குவ மென்பரால். 56. எண்ணி யெண்ணி யிரங்குவ ரென்னினிப் பண்ணு வோமென நெஞ்சம் பதைக்குவர் கண்ணி னீரறக் கல்லைநெஞ் செள்ளுற மண்ணி்ற் பட்ட மரத்தினை யொத்தனர். 57. இன்ன ணம்மெய் மறந்திருந் தேபினர் அன்னை தன்னிலை யாமையை யெண்ணியே பொன்னி னாக்கிய பாவையைப் போன்றநம் அன்னை தன்னை யடக்கஞ்செய் தாரரோ. 58. கொன்று வீழ்த்தக் கொடிய கயவர்கள் சென்று கோசிகன் தீநிலை யெய்தியே நின்ற வேள்வி நிலவுறச் செய்தனர் அன்று தொட்டைந்து நாள்செல வாகவே. ------------------------------------------------------------------------------------------- 51. உன்னை - உன்னையா கொன்றனர். 55. எச்சம் - மீதி. துச்சில் ஒதுக்கிடம். | |
|
|