59. கூடிக் கொன்றுயிர் கொண்டக் கொடியவர் ஓடிச் சென்றுறை கின்ற வுறையுளைத் தேடிச் சென்று தெரிந்தில ராயுளம் வாடிக் கன்றி வருந்தி யிருக்கையில். 60. அசைவி லாம லயோத்தியை யாண்டிடும் தசர தன்குலந் தாங்கிடு மக்களாம் நசையி லாராம லக்குவர் காப்புடன் உசிரை வேட்கிறான் கோசிகன் உற்றெனா. 61. சென்று தூதுவர் செப்பச் சுவாகுவும் இன்றி தோவென் றிளவர சோடுபோய் வென்றி யென்றுசெய் வேள்வி தனிலுயிர் கொன்று தின்னுங் கொலையைத் தடுத்தனன். 62. தடுக்க வந்தத் தறுதலை ராமனும் வெடுக்கென் றம்பை விடுத்துச் சுவாகுவைச் சடக்கென் றுநிலஞ் சாய்க்கமா ரீசனும் திடுக்கென் றாயிடைச் செவ்வியை நோக்கியே. 63. ஆங்கு நின்று மகன்றன னப்புறம் ஓங்கி வாழு முயிர்பல கொன்றுமே வீங்கு வேள்வி விருப்புடன் முற்றியே நீங்கி னாரவண் நின்றவர் மூவரும். | 6. காப்புப் படலம் | 1. ஆமி தன்றறி யாவட வாரிய ராமன் கெட்ட நடத்தையைக் கண்டனம் நாம வேலிறை தங்கையாம் நாணணி காம வல்லியின் காப்பினைக் காணுவாம். ------------------------------------------------------------------------------------------- 61. இன்றிதோ - இப்போதே போகலாம். ஆயிடைச் செவ்வி - அங்கு அப்போதுள்ள தனது நிலை. | |
|
|