பக்கம் எண் :


296புலவர் குழந்தை

   
எழுசீர் விருத்தம்
 
          2.   மாபெருந் தேவி யோடிரா வணனோர்
                   மணியணி மண்டபத் திருந்தே
              ஆபெருந் துயர முழந்தன மெனவஃதி
                   யாதென விறைவியு மணங்கே
              தாபத நோன்பு நோற்றுநந் தங்கை
                   தனித்துய ருழத்தலை நினைக்க
              மாபரு கியபூ வென்னவென் னுள்ளம்
                   மாழ்கியே செயலற மறுகும்.

          3.   பொன்னிலை யென்றோ புலம்விளை வின்றிப்
                   புசித்திட வுணவிலை யென்றோ
              துன்னிய திறையின் சுமைபெரி தென்றோ
                   சுடுதொழி லலுவலா ளர்கள்செய்
              இன்னலின் றொகையாற் றாவெரு வந்தோ
                   இறைகொடி யோனெனக் குடிகள்
              சொன்னவெஞ் சொல்லிற் பன்மடங் குளத்தைச்
                   சுடுகுதே கைம்மைநா னெனுஞ்சொல்.

          4.   மணமலி கூந்தல் உயிர்களாண் பெண்ணா
                   மருவியே வாழ்குறும் வாழ்க்கைத்
              துணையிழந் தொன்று தனித்துல கின்பந்
                   துய்க்குமோ அக்கொடும் போரில்
              கணவனை யிழந்து தனித்துய ருழக்கும்
                   கனிமொழி வாழ்வியல் அலைவாய்ப்
              புணையிலி வாழ்வு போலிய தன்றோ
                   பொன்மதிக் குமோவொளி போகின்.

          5.   ஈங்குநா மிருக்கு நிலையினை யெண்ண
                   எண்ணவென் னுளநிலை கலங்கித்
              தீங்குசெய் தவரிற் செயலறச் சொடுங்கித்
                   திக்குக் காடுதென் னாவி
              மாங்குயில் மொழியாள் மயிலியல் காம
                   வல்லிநம் மிருக்கையைக் கண்டால்
              தாங்குமோ வன்றித் தரிக்குமோ ஆவி
                   தமிழ்மொழிச் சிறுகருங் குயிலே.
-------------------------------------------------------------------------------------------
          2. தாபத நோன்பு - கைம்மை நோன்பு. 3. வெருவந்தம் - குடி களஞ்சும் செயல்.