பக்கம் எண் :


இராவண காவியம் 297

   
         6.    என்றுமே மலர்க்கண் ணிணைபடச் சோனை
                   இராவணன் கூறிய விளஞ்சொல்
              சென்றிணை பொருதுஞ் செவிபுகா முன்னம்
                   திருநுதல் செய்யபொற் பாவை
              கன்றியே வெயிலி லொளிமுகங் கறுத்தே
                   கண்ணிணை வெளுத்துமுத் துதிர்த்தே
              பொன்றுவர்ச் செவ்வாய் திறந்துமுத் திலகப்
                   புலம்பிடும் புதுமையைப் போன்றாள்.

         7.   அன்னமென் னடையா ளங்ஙன மசைவற்
                   றழல்படு தளிரெனக் கருகிப்
              பன்னொடி பேச நாவெழா துள்ளம்
                   பதைபதைத் திடப்பரி வுற்றுப்
              பின்னொரு வாறு தேறியே மலரால்
                   பெருகொளி முத்தினைத் துடைத்தே
              என்னுயிர்க் குயிரே தமிழகங் காக்கும்
                   இலங்கிலைச் செங்கதிர் வேலோய்

         8.    தாதினு மினிய தமிழ்முழு துணர்ந்த
                   தாங்களே கழிந்ததற் கிரங்கி்ன்
              பேதையென் றுலகம் பேசிடு மேழைப்
                   பெண்டிர்க ளெங்ஙனம் பொறுப்பர்
              மாதவ ளதனை மறந்துமே வாழும்
                   வகையெவை யவையெலா மாக
              யாதொரு குறையு மிலையவட் கெங்கை
                   யானெனு மொருமையு மற்றோம்.

         9.    ஏதுவு மெடுத்துக் காட்டுமெவ் வளவோ
                   இயன்றவா றெடுத்தினி துரைத்தும்
              காதலங் கயிற்றா லிரண்டறப் பிணித்த
                   கணவனோ டுயிர்விடத் துணிந்த
              மாதெனைத் தடுத்துக் கெடுத்தனிர் மேலும்
                   வருத்துதல் தகாதென மறுத்தாள்
              ஆதலா லதனை விடுத்தவ ளமைதிக்
                   காவன புரிந்திட வமைந்தேன்.
-------------------------------------------------------------------------------------------
         8. ஒருமை - ‘நீ, நான்’ என்னும் ஒருமை எண். 9. ஏது - காரணம், மறுமணத்தை மறுத்தனள்.