ஆரியர்கள் தமிழகத்தில் புகுவதை, |
| தஞ்சமய நெறிகளைச்செந் தண்மையுட னறனிழுக்காச் சால்பு தாங்கும் நெஞ்சுடைய வறிவரொடு புலவருமாங் கிருக்குமென நினைக்கு மாறு விஞ்சியதஞ் சூழ்ச்சியினாற் சுவையொடுகற் பனைக்கதையா விளம்பி யந்ந நஞ்சனைய வஞ்சகர்கள் மன்னரையு மவர்களொடு நம்பச் செய்தார். |
என்று குறிப்பிடுகிறார். இப்படிப் புகுந்தவர்கள் தமக்கேயுரிய புலைத் தொழிலையும் கொலைத் தொழிலையும் தொடங்கினர் முதலில் இராவணன் தங்கையான (சூர்ப்பநகை) காமவல்லி ஆரியரால் கொல்லப்படுகிறாள். இக்கொலை நிகழ்ச்சி கண்ட தமிழ் மகளிர்குலம் தாங்கொணாச் சினங்கொண்டு கொதித்தெழுகிறது. இங்கே புலவர் குழந்தையின் பாடல்களில் செந்தமிழ்ச் சொற்கள் தீப்பந்தங்களாகவே மாறிச் சுடுவதைப் பாருங்கள்: |
| பெற்ற கொடும்பாவீ! பெண்கொலைசெய் பாவிதனைப் பெற்ற பெருவயிற்றைப் பீறிச் சிதைத்திடுவாய்! மற்றுநீ பெண்ணன்றோ மானங்காத் தேமாள்வாய்! அற்றே லுலகளவு மவதூறு நீங்காதே. எம்மை யுருக்குலைத்தே இந்நிலைக்கா ளாக்கியவச் செம்மையொன் றில்லாத தீயவனன் னாட்டுறையும் அம்மைமீ ரக்கைமீ ராமா ரியப்பெண்காள்! உம்மையுமப் பாவி யுருக்குலைக்க வஞ்சுவனோ? |