பக்கம் எண் :


306புலவர் குழந்தை

   
       32.     எய்திய முனிவனைத் தொழுதென் எந்தையே
              செய்தியுண் ே்டாவெனச் சிரித்துக் கோசிகன்
              பெய்திடு மம்பினைப் பிறையைப் போற்றினால்
              உய்தியு முண்டதி லுனக்கெ னாமுனம்.

       33.     சொல்லிய புதிரினைத் துணிந்து கொண்டனன்
              வில்லினை வளைப்பது வெண்ம திப்பிறை
              புல்லிய வம்பது பொழியும் வெண்கதிர்
              அல்லவோ எனமுனி ஆமாம் மைந்தகேள்.

       34.     அங்கொரு பெண்ணைநீ அழித்தற் கீடதா
              இங்கொரு பெண்ணைநீ எய்தப் பெற்றனை
              மங்குலை யணிமதில் மிதிலை மாநகர்
              மங்கல நாளினில் வந்து புக்கனம்.

       35.     தாதுகு தாமரைப் பூவின் தண்ணிதழ்
              மீதனங் கண்படு மிதிலை நாட்டினைப்
              பாதுகாத் துலகியல் பயிலு மன்னற்குச்
              சீதையென் றொருபெயர்ச் செல்வி யுள்ளனள்.

       36.     கலைமதி யெனவொளி காலும் பாவைதன்
              விலையென வொருபெரு வில்லை வைத்துளான்
              சிலையினை வளைத்திடுஞ் செம்மல் தோளெனும்
              மலையினை யன்னவள் மணந்து கொள்வளாம்.

       37.     இதுவரை யெண்ணிலா மன்ன ரெய்தியம்
              மதிமுகி வில்லினை வளைக்க மாட்டிலார்
              எதிரிடம் போயினார் என்ன ராமனும்
              இதுமலை யோவென எழுந்து நின்றனன்.

       38.     திருத்தகு மொருத்திவஞ் சினம தாகிடில்
              துருப்பிடித் திருக்குமச் சொத்தை வில்லினை
              முரித்துமே யெறிகுவன் மன்னன் முன்னென
              நரித்தொழில் முனிவனும் நம்பி நன்றெனா.
-------------------------------------------------------------------------------------------
       32. அம்பு பெய்திடும் பிறையைப் போற்றினால் - வில்லை (பிறைபோல்) வளைத்தால்.