பக்கம் எண் :


310புலவர் குழந்தை

   
        62.    இன்னதே யுறுதியாம் என்னக் கோசிகன்
              மன்னவ பின்னவன் மகளிர் தம்மையும்
              தன்னிகர் பரதசத் துருக்கர் தங்கட்கும்
              பொன்னவிர் திருமணம் புரிகு வாயெனா.

        63.    சரியெனப் பெருமதிச் சனகன் தம்பியும்
              சரியெனத் தசரதன் மகிழ்ந்து தம்மனை
              விரைவினிற் சென்றரு மறையின் மேலர்க்குப்
              பெருநிரை யொடுபொருள் கொடுத்துப் பேணினான்.

        64.    கணியுரை நாளினை மிதிலைக் காவலன்
              மணமுர சறைந்துதூ துவரின் மன்னர்க்குப்
              புணரிய திருமுகம் போக்க வன்னரும்
              அணிநக ரெதிர்வுற அடைந்து மொய்த்தனர்.

        65.    ஊரினை யொப்பனை செய்ய ஊரவர்
              தாரினு மலரினுந் தரளந் தன்னினும்
              சேரிய பொருளெலாஞ் சிறப்பச் சேர்த்துமே
              ஆரியர் திருமண வறைய மைத்தனர்.

        66.    மைப்பெருங் கண்ணியர் மைந்தர் கண்ணினில்
              துய்ப்படும் பாவையைத் துறந்து மேவுற
              ஒப்பனை செய்துயர் உருவங் காட்டுவர்
              இப்படி யூரவர் இயன்றி ருக்கையில்.

        67.    மரபறிந் தியலுநற் பரதன் மாமனும்
              பரதனை யயோத்தியிற் பார்த்து மற்றவன்
              திருமணங் கண்டிடச் சென்று ளானென
              விரிமணிக் கொடித்தெரு மிதிலை யெய்தினான்.

        68.    வருகெனத் தசரதன் வருகை யென்னெனப்
              பரதனைத் தருகெனப் பாட்ட னேவினார்
              அரிமலர்ச் சோலைசூ ழயோத்தி சென்றியான்
              திருமினே னெனவுதா சித்துக் கூறினான்.

        69.    முரசறை திருமண முழுத்தங் கூடவே
              அரசரும் பெரியரும் அருமைச் சுற்றமும்
              விரைசெறி குழலரும் பிறரும் வேதரும்
              திருமண மண்டபஞ் சிறப்ப வெய்தினார்.
-------------------------------------------------------------------------------------------
        66. துய் - மென்மை.