பக்கம் எண் :


314புலவர் குழந்தை

   
       14.  ஆண்டனன் நாட்டு மக்கட் கச்சம தின்றி யின்பம்
           பூண்டனன் இளமை தீர்ந்து போந்தது முதுமை நும்மை
           வேண்டினன் நீரும் வாகை வேய்ந்தனிர் சிலைரா மற்கே
           தாண்டினன் கவலை யென்னுந் தடங்கட லதனை யென்றே.

       15.  மணிமுடி புனையு நாளை யருள்கென வசிட்டன் நாளை
           மணிமுடி புனைதற் கேற்ற மங்கல நன்னா ளென்னக்
           கணிசொலு கின்ற ராமன் முடிபுனை கடிகை நாளை
           அணிமிகு விடிய லென்ன அறைந்துபி னமைச்சை நோக்கி.

       16.  ஞாயிறு தோன்று முன்னே நாடொறு மறையோ தும்பல்
           லாயிர மாரி யர்காங் கவாவிய வனைத்துந் தந்து
           மேயபல் சுவையி னோடு விருந்தளித் துவப்பப் பின்னர்
           ஏயவை யொன்றுங் குன்றா தினிதுசெய் திடுக வென்றான்.

       17.  தசரதன் அமைச்சை நோக்கி ராமனைத் தருதி யென்ன
           விசையுட னடந்து சென்று விரைவுட னழைத்து வந்தான்
           நசையுட னடைந்தி ராமன் நம்பியை வணங்க ராமா
           இசைமிக வுனக்கு நாளை யின்முடி புனைவே னென்றான்.

       18.  தன்னுடன் பிறந்த தம்பி தனக்குரி யதனைக் கொள்ள
           மன்னுடன் சூழ்ச்சி செய்து வரும்பத ருரியோன் சென்ற
           பின்னுடன் பட்டுக் கூடப் பிறந்தவற் கிரண்ட கஞ்செய்
           தின்னுடன் பிழைத்தே னென்றவவ் விழிமக னியைந்து போனான்.

       19.  அன்னவன் போன பின்ன ரனைவரு மெழுந்து போக
           மன்னவ னமைச்சை நோக்கி மதிவலோய் ராமன் றன்னை
           என்னிட மழைத்து வாரு மெனவவன் சென்று கூற
           முன்னவன் எனக்கு நாளை முடிபுனைந் திடுத லின்றோ.

       20.  எதற்கெனை யழைத்தா ரென்ன எனக்கது தெரியா துன்னை
           மதிக்குடை யரசன் கூட்டி வருகென வந்தே னென்ன
           இதற்குளே யழைத்தற் கேற்ற காரண மெதுவோ வென்று
           குதித்தெழுந் தவனுஞ் சென்று கும்பிட்டுக் கொண்டென் றந்தாய்.
-------------------------------------------------------------------------------------------
       15. கடிகை - நாழிகை, நீக்குதல். 17. நம்பி - தந்தை.