அடுத்துப் போர் நடைபெறுகிறது. போரில் இராவணன் மகன் மடிந்து படுகிறான். அவன் - அன்னை வண்டார்குழலி உணர்விழந்து புலம்புகிறார். |
| தனியா யலர்ந்த மலர்வா யெழுந்து தகவே கசிந்த தெளிதேன் கனிபா லினைந்து படவே யுயர்ந்து கலைதா விவந்த தமிழர் அனைபோ லுவந்து முடிசூ டவிந்த வரசா ளவந்த மகனே! இனியா ரைநம்பி யுயிர்வாழ் வனுந்த னியலோ டமைந்த வெளியேன். படிமேல் நடந்து விளையா டிமுந்து பசியா கவந்து பரிவாய் மடிமீ தமர்ந்து தமிழ்வாய் திறந்து வடிதே னுகர்ந்து மழலை நெடிதே மொழிந்து மதிபோல் வளர்ந்து நிலமா ளநின்ற மகனே! கடிதே சினந்து வடவோ னெறிந்த கணையா லிறந்த தறமோ? கொலைவா ணர்விட்ட கணைமார் புதொட்ட குறியா லேபட்ட மகனே மலைவா ணரிட்ட குலைவா ழைபட்ட வடிதே னைவிட்ட மலர்போல் கலைவா ணரட்ட விழிமீ துபட்ட களமீ துசொட்ட கலுழி அலைவா ணர்விட்ட கலமீ துபட்ட வலையோய் வுபட்ட தடடா! |
ஆகா! இந்தப் பாடல்களைப் பயிலும்போது நாமே வண்டார் குழலியாகிக் கண்ணீர் விடுகிறோமே! ஆம்! புலவர் குழந்தையின் இந்தப் பாடல்கள் நம்மையே அழவைத்து விடுகின்றன. இப்படி எத்தனை எத்தனையோ சொல்லிக்கொண்டு போகலாம். பாடல்கள் அத்தனையும் ஒளிமுத்துக்கள். நூலின் பெருமையைச் சுருங்கச் சொல்வதானால் இதனைத் தமிழிலக்கியத்தின் சாறு என்றே கூறலாம். வையகத்திற்கு வாழ்நெறி யுணர்த்த வந்த ‘வள்ளுவம்’ வாழ்விலக்கணம் என்றால், அவ்வாழ்விலக்கணத்தின் முழுநிறை வாழ்விலக்கியம் புலவர் குழந்தையவர்களின் இராவண காவியம் |