பக்கம் எண் :


326புலவர் குழந்தை

   
       101.  அரசனவ் வாறு கூறச் சுமந்திர னகலத் தேவி
            வரிசையா யிரவு முற்றும் மணிமுடி புனையும் பேச்சை
            உரைசெயு மகிழ்ச்சி யாற்சோர் வுற்றிருக் கின்றார் மன்னர்
            அரசரிங் கழைத்தா ரென்று ராமனை யழைத்து வாரும்.

       102.  என்றுகை கேசி சொல்ல அமைச்சனவ் விடத்தை விட்டுச்
            சென்றுபின் திரும்பி வந்து திரண்டுளார் அரசர் முன்றில்
            என்றனன் மன்னன் மூத்தோய் ஏனினும் போக வில்லை
            சென்றுநீ அழைத்து வாராய் சீக்கிரம் எனவே சென்றான்.

       103.  மற்றவன் விரைந்து சென்று மைந்தனைக் கண்டு தந்தை
            சிற்றன்னை யகத்தி லுள்ளார் சீக்கிர மழைப்பா யென்று
            சொற்றனர் எனவே ராமன் துணைவனோ டெழுந்து சென்று
            பெற்றதை யிழந்தான் வெற்றி பெறாதவன் தன்னைக் கண்டு.

       104.  புனத்திடை யரியே றுண்ட பொருகளி றுணர்வு சோம்பி
            இனத்திடைக் கிடப்ப போல வியற்படு தந்தை தாயைத்
            தனித்தனி தொழுதான் மன்னன் தடங்கணீர் பெருக ராமா
            எனத்துயர் வாய்வா ளாம லிருக்கவே ராம னன்னாய்.

       105.  சிறியனே தேனுங் குற்றஞ் செய்தனோ தீரா நோயோ
            எறியெனுங் கடுஞ்சொற் கூறி யேக்கமுண் டாக்கி னீரோ
            அறிதர வுரைப்பீ ரென்ன அன்னையுன் தந்தை ராமா
            நெறிபிழை யாமை யாலே நெஞ்சநெக் குருகு கின்றார்.

       106.  மன்னவ ரெனக்குத் தந்த வாக்குறு தியைநிற் கோதின்
            என்னதை நீகேட் பாயோ இல்லையோ வெனுமை யத்தால்
            உன்னியே தியங்கு கின்றார் உறுதிநீ கொடுப்பா யானால்
            அன்னதை யுனக்கு நானே அறைகுவே னெனவே ராமன்.

       107.  அன்னையே எதுசொன் னாலு மப்படி யேசெய் கின்றேன்
            என்னவே பரத னிந்நா டாளவு மீரே ழாண்டு
            துன்னிநீ யரிய கானம் ஆளவுஞ் சொன்னார் மன்னர்
            இன்னையே செல்வாய் நீயு இசைத்தசொற் றவறா தென்றாள்.

       108.  சுடுகணை பாய்ந்த மான்போற் றுணுக்கென வுள்ளஞ் சோம்பி
            விடுகணை யின்றித் தாயே மிகுகுணப் பரதன் இந்த
            நெடுநில மதையா ளட்டும் நீடுற வேண்டு மானால்
            அடியனே னரிய கான மாளுகின் றேன்போ யென்றான்.
-------------------------------------------------------------------------------------------
       108. விடுகணை இன்றி - எதிர்மொழி கூற முடியாமல்.