பக்கம் எண் :


இராவண காவியம் 329

   
        123.  எண்ணிய வெண்ண மெல்லா மெதிரிகட் குரிய வாச்சே
             அண்ணவோ கிழவி ஏழை அரசனும் விரும்பான் என்றன்
             கண்ணியே யென்செய் வேனிற் களத்திக ளிடர்செய் வாரே
             மண்ணிடைப் பிரிந்து வாழேன் வருகுவேன் கான மென்றாள்.

        124.  எண்ணருந் திறலோய் வில்லை யெடுமினிப் பொறுமை வேண்டா
             பண்ணழி பாடல் போலப் பரதனுக் குரியோர் தம்மை
             மண்ணிடை வீழ்த்திச் செம்பொன் மணிமுடி புனைந்தே யன்னை
             புண்ணினை யாற்றி நாட்டைப் புகழொடு பொருந்தி யாள்வாம்.

        125.  தீயவள் கணவன் றன்னைச் சிறையினி லிட்டோ அன்றி
             வீயவே செய்தோ நாட்டை மீட்குவேன் கொடியா ளோடு
             போயொரு நொடியிற் கானம் போக்குவே னவனை யண்ணா
             நாயினேன் கடனீ தென்ன லக்குவன் குதிப்பத் தாயும்.

        126.  என்னருங் குழந்தாய் தம்பி இயம்புதல் கேட்டி என்ன
             அன்னையே பரதன் நல்லன் அவன்வரின் அயோத்தி நாட்டு
             மன்னவன் அவனே யென்று மக்களும் அறிவர் பின்னர்
             அன்னவர் மனமும் மாறும் அனைமுத லோரு மொப்பார்.

        127.  அன்றிநா னின்றே கான மேகினா லவன்கட் டாயம்
             மன்றலங் கானந் தேடி வருகுவ னென்னைப் பார்க்கத்
             துன்றிய பொழுது தோன்றுஞ் சூழ்ச்சியா லவன்பால் நாட்டை
             நன்றியான் பெறுதல் கூடும் எனச்சொலி நடக்க லானான்.

        128.  இல்லினை யடையச் சீதை யேன்மனக் கவலை மன்னா
             சொல்லுக பரதன் றாயின் சுழலிற்பட் டாரோ வுந்தை
             சொல்லுக வெனவே ராமன் நடந்ததைச் சொல்லி நிற்க
             வல்லியும் பிரியே னென்று மன்னனைத் தழுவிக் கொண்டாள்.

        129.  வல்லியான் கானஞ் சென்று வரும்வரை பரதனுக்கு
             நல்லவ ளாக அன்னான் மனப்படி நடந்து கொள்வாய்
             அல்லதூஉ மென்னைப் பற்றி யவனிடம் புகழேல் அன்னன்
             நல்லது செய்து காப்பான் மனப்படி நடந்தா லென்ன.
-------------------------------------------------------------------------------------------        123. கண்ணியே - கண்போன்றவனே. இற்களத்தி - கணவனின் மற்ற மனைவி