136. மருண்டவ னிடத்துப் போகும் வழியினிற் கண்டோர் வெண்ணெய் திரண்டிடும் போது தாழி யுடைந்ததே செங்கா லன்னம் இருண்டகா னகத்திற் போயங் கென்செய்வா ளையோ பாவம் புரண்டது மேல்கீ ழென்று புலம்பிடப் பெயர்ந்து போனான். 137. போயவன் எந்தாய் கானம் புறப்பட விடைதா வென்ன ஆயதோ உனைக்கான் போக்க ஐயனே என்று காண்பேன் தீயவள் எனையே மாற்றித் தீங்குசெய் திட்டாள் மைந்தா நீயெனை விலக்கி நாட்டை நெடிதர சாள்வா யென்றான். 138. எந்தைநீ ரேநா டாளு மேகியான் வருவேன் என்ன மைந்தனை யனுப்பு மென்று மங்கையு மறைவிற் றூண்ட எந்தையே ராமா போய்வா இனிதுநீ டூழி வாழ்க மைந்தனே யென்ன மன்னன் மனநிலை தேர்ந்த மைச்சன். 139. கேடிநீ கணவன் பேச்சைக் கேட்டிடா திவரைப் பாழுங் காடதற் கனுப்பு கின்றாய் கைப்பொருள் வாங்கிக் கொண்டிந் நாடதை ராமனுக்கு நல்குவாய் இலையேல் நீயும் வேடர்கை மான்போற் றுன்ப மேவுவா யெனவே மன்னன். 140. சோனைபோல் விழிநீர் பாயச் சுமந்திரா ராம னோடு தானையுங் குடியொ டின்பத் தையலர் வணிகர் செல்வம் போனவர்க் குடைய யாவும் போக்குவா யெனக்கை கேசி ஏனைய விலாத விந்நா டெதற்கெனச் சினக்க ராமன். 141. எனக்கவை யொன்றும் வேண்டா பரதற்கெ யீந்து விட்டேன் புனக்கரி போகும் போது கயிறொரு பொருட்டோ எந்தாய் மனக்குறை விடுமெங் கட்கு மரவுரி தருக வென்ன இனக்குயி லனகை கேசி வற்கலை யெடுத்துத் தந்தாள். 142. உடுத்தனர் சனகன் செல்வி உடுத்திட வறியா துள்க உடுத்திட வறியாய் கொல்லென் றுடுத்துவிட் டனன்கண் ணாளன் கெடுத்தனை யடிநஞ் சன்னாய் கேடுகெட் டவளே யுங்கள் குடித்தனம் நொடித்துப் போகுங் கொல்லென வசிட்டன் சீறி, | |
|
|