பக்கம் எண் :


336புலவர் குழந்தை

   
         8.  இனைய கானினி யேகல் தவிர்குவாய்
            எனைய வென்றியா னவ்விரு வீரையும்
            தனைய னோடு தருவ னயோத்தியை
            அனைம கிழநின் னாணையை வேட்குநன்.

         9.  என்று கூறி எரிசினங் கான்றிட
            நன்று நின்கெழு நட்பினை மெச்சினன்
            துன்று மெந்தைதஞ் சொல்லினைத் தட்டிலேன்
            என்றன் வாய்மொழி யேற்றமை கென்னவே,

         10. துன்ப மிக்குத் துளங்கியத் தோழனும்
            அன்பு மிக்குப் புலவூ ணளித்திட
            அன்ப வின்றய லாரிடை யுண்பதில்
            பின்பு வந்து பெருவிருந் துண்குவேம்.

         11.  என்று கூறி யிரும்புன லுண்டவன்
            மன்ற லங்குழல் மாதுட னாயிடைத்
            துன்று புல்லின் படுக்கையிற் றுஞ்சினன்
            நின்று காத்தனன் பின்வரு நீர்மையான்.

         12. கால மென்னுங் கதிரவன் றோன்றலும்
            ஏல தாமென் றெழுந்து குகன்றனால்
            ஆலம் பால்கொ டணிந்து சடைமுடிக்
            கோலங் கொண்டு கொடிப்பட கேறினன்.

         13. கெடும னத்தகை கேசி யிடத்தெமை
            அடிமை யாக்கி யகலுதல் நேர்மையோ
            நடுமை காத்துடன் நானும் வருகுவன்
            சுடுமை நீக்குவை யென்னச் சுமந்திரன்,

         14. மன்ன வன்றுயர் மாற்றுத லுன்கடன்
            துன்னு வோம்விரை வாயெனச் சொல்லுசிற்
            றன்னைக் காக அவருள்வ தைச்செயும்
            அன்னை மார்கவ லற்றிருக் கச்சொலும்.

         15. என்றுந் தந்தைபோற் றாய ரிடத்திலும்
            நன்று தாழ்ந்து நடக்கவும் அன்னருள்
            என்றன் றாயை யினிது புரக்கவும்
            இன்று ணைக்கைப் பரத னிடஞ்சொலும்.
-------------------------------------------------------------------------------------------
         14. உள்வது - எண்ணுவது. கவல் - கவலை.