24. ஓவக் கூட மலையினை யுற்றவர் மேவிக் கண்டுவான் மீக முனிவனைப் பாவித் தம்பி யிலைக்குடில் பண்ணிடக் காவிக் கண்ணி கணவனு மெம்பிகேள், 25. நல்வி லங்கினைக் கொன்றிந்த நல்லிலிற் செல்வ வேள்வியாஞ் செய்து களிக்குவோம் கொல்வ தாலொரு குற்றமின் றவ்வுயிர் புல்வ தாகும் பொருந்திய நன்னிலை. 26. என்னத் தம்பியு மேகிக் கறுப்புமான் தன்னைக் கொன்று தசையைத் தகுதியாத் தின்னற் கேற்பவெந் தீயிற் சமைத்தவர் மன்னத் தின்று மகிழ்ந்தங் கிருந்தனர். 27. ஓகை மீக்குற வுற்ற படகுகா லாக மற்றவ ரக்கரை சேர்ந்ததைப் பாக னோடு குகனின்று பார்த்துப்பின் ஏகி யேதம தில்லினை யெய்தினான். 28. ஓங்கு மோவியக் கூடம துற்றனர் தீங்கி லாரெனத் தூதர்போய்ச் செப்பலும் ஆங்கு நின்றுதேர்ப் பாக னகன்றுபோய் வீங்கு மாட வயோத்தியை மேவினான். 29. மேவிப் பாகன் விழிப்புனல் சிந்திட ஆவித் தாவி யலமரும் அண்ணலை மேவிச் செல்வன் விளம்பிய கூறவே கூவிக் கோவெனக் கோமகன் வீழ்ந்தனன். 30. மண்ணை மோதியென் மைந்தவோ வாவென அண்ண லுந்தெரி யாமையாற் கெட்டனென் றெண்ணி யெண்ணி யிராமன் பிரிவெனும் புண்ணி னோவாற் புலந்துயிர் விட்டனன். 31. செய்தி கேட்டவன் றேவியர் யாவரும் உய்தி யோவிலை யோவென் றழுதனர் பெய்து நெய்யிற் பிணத்தை யிருக்கையிற் செய்தி கேட்டுத் திரண்டன ரூரவர். ------------------------------------------------------------------------------------------- 27. பாகன் - சுமந்திரன். குகனுடைய தூதர் இராமனுடன் சென்று வந்து செப்பினர். | |
|
|