40. தீய பாவியென் செய்தனை அண்ணனைச் சேய கானஞ் செலுத்தியென் றந்தையை மாய வைத்தெனை வாழவைத் தாயென வாயில் வந்த படியெலாம் வைதனன். 41. குன்றி யன்னவுட் கோசலை வந்தடா இன்றுன் எண்ணமீ டேறிய தோவென ஒன்று மேயறி யேனென வொள்ளியான் நன்று வாழ்கென நம்பி பரதனும். 42. தந்தை யின்னுடல் தன்னை யடக்கஞ்செய் தெந்தை தந்தநா டீகுவே னண்ணனுக் கிந்த வேளை யெழுகென் றிசைவலான் உந்து தானைத் தவைவனுக் கோதினான். 43. குடிக ளோடு குறுநில மன்னமைச் சடைய வேயவை யாக்கி வசிட்டனும் முடிபு னைந்திட வேண்டிட முன்னனுக் குடைய தாமென வோதிப் பரதனும். 44. பெற்ற தாயு பெறாவனை மார்களும் குற்ற மேய வமைச்சுங் குருக்களும் மற்று ளாரும் வளநகர் புல்லென உற்ற தானை யுறவொடு போயினான். |
10. மிதியடி பெற்று மீள் படலம் |
1. போயி னானகர் புல்லெனத் தோரண வாயில் நீங்கி மகளினைத் தேடுகைத் தாயி னேங்கித் தடந்துயர் தாங்கியே சேய கானஞ் சிறுகிடத் தேடியே. 2. நடந்து கோசல நாடுபின் னாகிட உடைந்த வுள்ளமு மூறிய துன்பமும் தொடர்ந்து பின்வரத் தோன்றல் வழியினைக் கடந்து கங்கைக் கரையினிற் றங்கினான். |