பக்கம் எண் :


342புலவர் குழந்தை

   
       11.  செலமு னிந்து செருச்செய வோவென
           இலைய ழைத்தவ ணேகவந் தேனெனப்
           புலவுங் கள்ளும் பொருந்த வருந்திட
           உலைவி லாவிருந் தூட்டினன் அம்முனி.

       12.  எம்பி யங்கவ் விரவைக் கழித்துமே
           நம்பி வாழ்விடம் நற்றவன் கூறவே
           பம்பு சேனையி னோடு பரதனும்
           தும்பி வாழுந் தொடர்வழிச் சென்றனன்.

       13.  தெள்ளு கானத் தெருவிடைச் சென்றுவான்
           கொள்ளு மோவியக் கூடத்தைக் கண்டுபோய்
           உள்ளு மோரிடத் தொண்புகை கண்டவன்
           நள்ளு தானை நிறுத்தி நடந்தனன்.

       14.  அஞ்சிச் சேனைக் கடைந்த விலங்கினை
           வஞ்சிக் கின்பப் புலாலின் வகையினைக்
           கொஞ்சித் தின்று கொடுத்து மகிழ்ந்திடும்
           நஞ்சத் திண்சிலை ராமன் வினவவே.

       15.  வானி னோங்கு மரத்தினி லேறிவான்
           சேனை கண்டு திடுக்கிட் டிலக்குவன்
           மானை யுட்குகை வைத்து நெருப்பணை
           ஆன போர்க்கு விரைந்தெழு வாயென.

       16.  என்ன வென்னப் பரதன் எதிர்த்தனன்
           துன்னு தானைத் தொகையொடு வந்தனன்
           இன்னை யேயவ னின்னுயிர் போக்கியான்
           மன்ன னாவுனை வாழவைப் பேனென்றான்.

       17.  வென்றி யாளனீ வில்லினில் வல்லவன்
           நன்று நன்றவன் நம்மொடு போர்க்கல
           இன்றெ னையழைத் தேக வருகிறான்
           என்று கீழிறங் கென்ன விறங்கினான்.

       18.  மொண்டு பெய்யு முகிலென முன்னனைக்
           கண்டு சென்றுமுன் கைகயி மைந்தனும்
           அண்டி யண்ண னடித்தல மீதுவேர்
           விண்டு வீழ்மரம் போல விழுந்தனன்.
-------------------------------------------------------------------------------------------
       12. பம்புதல் - நிறைதல். தும்பி - யானை. 13. நள்ளுதல் - செறிதல். 15. மான் - சீதை. குகைஉள்.