26. உரிமை யாகின் உனக்கதை யீந்தனன் அருமை யாயர சாளுமண் ணாவெனப் பெருமை யாகப் பெயர்ந்தெனக் காகநீ அருமை யாயர சாளுவா யென்றனன். 27. தந்தை சொல்லினைத் தட்டிநா டாண்டிட வந்த னேல்நம் வரன்முறை பொய்த்திடும் மைந்த ஏழிரண் டாண்டில் வருகுவன் சிந்தை தேறிநீ செல்க மறாதென்றான். 28. சொற்ற சொல்லினைத் தட்டத் துணிகிலான் மற்றை யோரை வணங்கி மிதியடி பெற்றி யாண்டுப் பெயர்தந் தயோத்தியைக் கொற்றத் தானைப் பரதன் குறுகினான். 29. அடைந்த பின்ன ரயோத்தியை விட்டவன் நடந்த போய்ச்சிறு நந்தியூர்த் தங்கியே மிடைந்த மாமுடி சூட்டி மிதியடிக் கிடைந்து நாட்டினை யாண்டங் கிருந்தனன். 30. மணிகு யின்று வருமுடி தாங்கியே தணிவி யன்றமை சத்துருக் கன்பெருந் துணையி னோடு பரதன் தொழுதிட அணிய யோத்தி யதைச்செருப் பாண்டதே. | 11. தமிழகம் புகு படலம் | 1. விடையி னோடு மிதியடி பெற்றுநாற் படையி னோடு பரத னகன்றபின் அடையி னோடவண் வாழ்ந்திடு மாரியர் முடையி னோடு முகஞ்சுழித் தையுரீஇ. 2. தேடிக் கண்டு பிடித்த திருடரை ஓடிக் கண்டு வெருவுறு மூரர்போற் சூடிக் கொண்டவில் லாளியைச் சுட்டியே கூடிக் கொண்டு குசுகுசு வென்றனர். ------------------------------------------------------------------------------------------- 29. அடைந்த - நெருங்கிய. இடைந்து - வருந்தி. 1. அடை - சிறப்பு. முடை - வருத்தம். | |
|
|