பக்கம் எண் :


இராவண காவியம் 347

   
        18. அன்று தாடகை யாவி குடித்துநீ
           சென்ற பின்னரச் செய்தி யறிந்ததும்
           வென்றி வேற்கை விறன்மிகி ராவணன்
           கன்றி விந்தகங் காப்பமைத் துள்ளனன்.

        19. தடம லிந்த தமிழகங் காத்திடும்
           அடலி ராவணன் தங்கை யழகமர்
           மடம யிற்காம வல்லியிவ் விந்தகம்
           கடமை யிற்படக் காத்து வருகிறாள்.

        20. பிள்ளை யுள்ளம் பெயர்ந்து மலர்புகு
           கள்ள யில்புளின் கண்படு காளையர்
           உள்ள மென்னு முயர்செம் பொருளினைக்
           கொள்ளை கொள்ளும் எழினலங் கொண்டவள்.

        21. மழக ளிறன மன்னவன் மைந்தகேள்
           பழகு செந்தமிழ்ப் பாவை யவள்புறத்
           தொழுகு மைந்த ருளங்கவ ரத்தக
           அழகெ லாந்திரண் டோருரு வாயினாள்.

        22. அத்த கைய வழகுட னாணவா
           வத்த கையபே ராண்மையு மொத்தவள்
           எத்த கைய வெதிர்ப்பும் விதிர்ப்புற
           வைத்து ளாள்காவல் மைந்தவம் மானனாள்.

        23. இளமை மிக்க எழினல மேயவ
           விளவ ரசியி னேற்ற படைவலான்
           வளமை மிக்க மலையினுந் திண்ணியான்
           உளமி குத்த வுயிர்சின வேற்கரன்.

        24. மாவ லீஇய மறவர்பல் லாயிரர்
           காவ லாகக் கரனெனும் பேரினான்
           தாவி லாதவள் தானைத் தலைவனாய்
           ஆவி காக்குநல் யாக்கைபோற் காக்கிறான்.

        25. பண்டு தென்றமிழ்ப் பாண்டிய னாகிய
           கொண்ட மீனக் கொடியடற் சம்பரன்
           மண்டு தானையி னோடவன் மண்படக்
           கண்டு நம்மரைக் காத்தவுன் றந்தைபோல்.