பக்கம் எண் :


350புலவர் குழந்தை

   
        41.  என்று நின்ற மொழிய தியம்பியே
            துன்று கானந் தொடர்ந்து சுதீக்கணன்
            ஒன்றி வாழு முறைவிடங் கண்டுமே
            அன்று தங்கி யகன்று வழிக்கொண்டார்.
 
எழுசீர் விருத்தம்
 
        42.   மறையவர்க் காகப் பகைசிறி தில்லா
                  வண்டமிழ் மக்களைக் கொல்ல
             இறைவநீ துணிவு கொண்டதை நினைக்க
                  வென்னுள நடுங்குறு ததுவும்
             அறமெனப் படுமோ வல்லதூஉ மயலா
                  ராளயல் நாட்டிடைச் செல்லல்
             முறையெனப் படுமோ தமதுநன் னாட்டை
                  முறையொடு புரப்பவர் தமக்கே.

        43.   அன்றியு முனமே தமிழர்கோன் சுற்ற
                  மாகிய தாடகை தன்னைக்
             கொன்றுமே தமிழர் பகையினைக் கொண்டீர்
                  குறுகுத லினுந்தமி ழகத்தை
             ஒன்றிய பகைக்கோ ரூதிய மன்றோ
                  உண்மையைத் தமிழர்க ளுணரின்
             மன்றலந் தாரோய் பகையினை விலைக்கு
                  வாங்குத லாகுமே யன்றோ.

        44.   ஆதலால் நாமும் படைக்கல நீத்தே
                  யைம்புல னடக்கியிக் காட்டில்
             மூதறி வாள ரொடுதவ முஞற்றல்
                  முறையென நினைக்கிறே னென்னக்
             கோதைமென் குழலாள் கூறவுந் தமிழர்
                  குலப்பகை யாகிய ராமன்
             மாதியான் சொன்ன சொல்லினைத் தவறேன்
                  வாவெனக் கொடுவழி நடந்தான்.

        45.   காட்டிடை யைந்து பெண்ணொடோர் முனிவன்
                  களிப்பதை யாங்கொரு முனிவன்
             காட்டிடக் கண்டு மனமகிழ் கொண்டு
                  காதல்மீக் கூரவே சென்று
             கூட்டமா யிருந்த முனிவர்கள் குடிலைக்
                  குறுகியே யவர்விருந் தினனாய்
             வாட்டடங் கண்ணா ளோடுபத் தாண்டு
                  வதிந்தன னாயிடை மருவி.