பக்கம் எண் :


356புலவர் குழந்தை

   
        21. அன்ன மென்ன வகன்றுமே
           பொன்னி னன்ன புதுமலர்
           தன்னின் மன்னு தனிப்பொழில்
           துன்னி னாள்பசுந் தோகையும்.

        22. அப்பொ ழிலின ழகினை
           மைப்பொ ருவிழி மங்கையும்
           கைப்பொ ருவுறக் கண்டுமே
           செப்பி தழெனச் செய்கையில்.

        23. அல்கு புன்மனத் தாரியர்
           ஒல்கி வாழு முயிர்களைப்
           புல்கு வேள்வி புரிந்திட
           நல்கி வாழ்சிலை ராமனும்.

        24. முனிவர் காப்பினில் மொய்குழற்
           சனகி தங்கிடத் தம்பியோ
           டனைய சோலையை யண்மியே
           தனிய னாயவண் சார்ந்தனன்.

        25. தன்னி கர்த்த தமிழர்வாழ்
           வின்னி லைக்கிழி வெய்தவும்
           தன்னி னத்தர் தலைவராய்
           மன்ன வைத்தமா வஞ்சகன்.

        26. தம்பி தாயந் தனைப்பெற
           நம்பி யாரிய நஞ்சரை
           அம்பி னாலோ ரருந்தமிழ்க்
           கொம்பை வெட்டுங் கொடியவன்.

        27. கொடிய ருண்டு கொழுக்கவே
           அடிமை கொண்ட வறனிலாப்
           படிற னெங்கள் பழந்தமிழ்க்
           குடைய தாயுயி ருண்டவன்.
-------------------------------------------------------------------------------------------
        22. கைப்பு ஒருவுற - கசப்புநீங்க - இனிமையாக. செப்பு - சிமிழ். இதழ் - வாய். சிமிழ் வாய்போல் மணம் பொருந்திச் சென்றாள். 26. தம்பி - பரதன். தாயம் - உரிமைச் சொத்து, அரசு. 27. ஆரிய முனிவரால் அடிமை கொள்ளப்பட்டவன். படிறு - கொடுமை.